பெட்ரோல் பங்க் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..!

பெட்ரோல் பங்க் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..!

ராமநாதபுரத்தில் பெட்ரோல் பங்க் மீது மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிச்சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி பேருந்து நிலையம் அருகே செல்லம் செட்டியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களாக இளைஞர் ஒருவர் காலி பாட்டிலில் பெட்ரோல் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பாட்டிலில் பெட்ரோல் தர பங்க் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் மண்ணெண்ணெய் நிரம்பிய பாட்டிலில் திரியை பற்ற வைத்து, பெட்ரோல் பங்க் மீது வீசியுள்ளார். தொடர்ந்து சம்பவம் இடம் சென்ற போலீசார் சிசிடிவியின் அடிப்படையில் இளைஞரை தேடி வருகின்றனர்.