பீடா கடையில் 7 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்..!

பீடா கடையில் 7 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்..!

சென்னையில் 7 கிலோ எடையுள்ள கஞ்சா போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜாம் பஜாரில் உள்ள பீடா கடை ஒன்றில், போதை சாக்லெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார் போதை சாக்லேட் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பீகாரிலிருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து, சென்னையில் விற்பனை செய்து வந்த சுரேந்தர் யாதவை போலீசார் கைது செய்தனர்.