1 பெண் உட்பட, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குற்றவாளிகள் கைது...

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குற்றவாளிகள் கைதாகியுள்ள நிலையில், இது வரை 290 குற்றவாளிகள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 பெண் உட்பட, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குற்றவாளிகள் கைது...

சமீபத்தில் சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடைகளை தடுக்கும் நோக்கத்தில், கடும் நடவடிக்கை எடுத்து வரும் காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி தேடி பிடித்து வருகின்றனர்.

அதிலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விலைவிப்பவர்கள், கொலை மற்றும் கொலை முயற்சி, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மாணவி சேர்க்கையை இதற்காக எல்லாம் தடுப்பது சட்டப்படி தவறு - உயர்நீதிமன்றம்

இவர்கள் மட்டுமின்றி செயின் பறிப்பு தொடங்கி சைபர் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் வரை அனைவரையும் கண்காணித்து “குண்டர் சட்டத்தின்” கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தாண்டு ஜனவரி 1ம் தெதி முதல் இன்று வரை தொடர்ந்து நடத்திய கண்காணிப்புகளில் இது வரை நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைதாகியுள்ளனர்.

மேலும் படிக்க | ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்...

கொலை, கொலை முயற்சி, பொது மக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றம் - 230 குற்றவாளிகள்

திருட்டு, செயின் பறிப்பி, வழிப்பறி, பணமோசடி குற்றங்கள் - 92 குற்றவாளிகள்

கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை உற்றம்- 51 குற்றவாளிகள்

பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய குற்றம் - 7 குற்றவாளிகள்

பெண்களை மானபங்கம் செய்த குற்றம் - 2 குற்றவாளிகள்

சைபர் குற்றம் - 7 குற்றவாளிகள்

உணவு பொருள் கடத்தல் பிரிவு - 1 குற்றவாளி

என மொத்தம் 390 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். இந்நிலையில், இந்த ஒரு வாரம் மட்டுமே, ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர்.  நிஷா (எ) நிதி, பிரகாஷ் ஷர்மா, அஜய் ராகுல், அமர்நாத் (எ) அம்மாபாய், வெங்கையன், அஜேஷ் (எ) அஜித், பயாஸ் என்ற 7 பேர் தான் அந்த குற்றவாளிகள்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | காட்டிக் கொடுத்த நண்பர்கள்... போட்டுத் தள்ளிய கும்பல்...


ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி கருக்கா வினோத் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. பின்னர் வழக்கின் ஆவணங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அதன்படி, ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.   

இதையும் படிக்க : வெள்ளம் வடிந்த நிலையில், முழுவீச்சில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்!

ஆளுநர் மாளிகைக்கு எதிரில் உள்ள சாலை, குண்டு வீசப்பட்ட பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படையைச் சேர்ந்த சில்வாணு என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவரை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாாி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 14 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை  சோதனை நிறைவு பெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவா் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறி, அதிலிருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதற்கட்டமாக சுரேஷ் பாபு 20 லட்ச ரூபாயை கொடுத்த நிலையில் மீதி தொகையையும் கேட்டுள்ளார். 

இதுகுறித்து சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அங்கித் திவாரியை கொடைரோடு அருகே மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் 15 மணி நேரம் விசாரணை நடத்தி, நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை  துணை மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்த சென்ற போது அமலாக்கத் துறை ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  இதனால் சட்டம் ஒழுங்கு போலீசாரை வரவழைத்து அவர்கள் பாதுகாப்புடன்  சோதனை மேற்கொண்டனர். அங்கித் திவாரியின் அறையில் உள்ள கணினி, அவர் கையாண்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினி, மின்னஞ்சல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவரது வங்கிப் பரிமாற்றம் குறித்தும் அவரை கைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் குறித்தும் விவரங்களை சேகரித்தனர். 14 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 3 லேப்டாப்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாதுகாப்புக்காக கோயம்புத்தூரில் வந்த சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் 7 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் காத்திருந்தனர்.

மேலும், மதுரையை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை  மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு 15-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

புழல் சிறையில் உள்ள கேன்டீனில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஜிலன்ஸ் தலைமைக் காவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது..

சென்னை புழல் சிறைக்காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ்(36). இவர் சென்னை புழல் மத்திய சிறை இரண்டில் விஜிலென்ஸ் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

புழல் சிறை ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்த இவர், பின்னர் அயல் பணியாக புழல் சிறை 2-ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள கேன்டீனில் விஜிலன்ஸ் காவலர் ராஜேஷ் மாதம், மாதம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.

இதனையடுத்து புழல் சிறை விஜிலன்ஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது காவலர் ராஜேஷ் கேன்டீனில் இருந்து மாதம் 25 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவலர் ராஜேஷை புழல் சிறை 2 விஜிலன்ஸ் பிரிவில் இருந்து சிறை 1-க்குப் பணி மாற்றம்  செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  மேலும் சிறைக் காவலர் ராஜேஷிடம் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏற்கெனவே புழல் சிறையில் உள்ள கேன்டீனில் டீ, காபி - 50 ரூபாய், சிக்கன் பிரியாணி - 700 ரூபாய், பீடிக் கட்டு - 400 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,  விஜிலன்ஸ் தலைமைக்காவலர் கேன்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  | இஸ்ரேல்- ஹமாஸ் போர்: சமரச பேச்சுவார்த்தைக்கு பின், பணயக் கைதிகள் விடுவிப்பு..!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த 2006லிருந்து 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி பொன்முடி, கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.  9 கோடி நிரந்தர வைப்பு தொகை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கியது.

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் இந்தசூழலில் சென்னை உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க: ”மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்” - எடப்பாடி

தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காந்தி சிலையின் முன்பு அவ்வப்போது பல்வேறு விழாக்களை நடத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை  அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் காந்தி சிலையின் வலது கை உடைக்கப்பட்டு சிலையில் ஒரு கை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு  அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறிந்து வந்த  ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிலையில் இருந்த கையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்து காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலையின் முன்பு அமர்ந்து காந்தியின் சிலையை அவமதித்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தி சிலை உடைக்கப்பட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கம்பம் நகர் பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.