6 மாதங்களில் 557 கிலோ கஞ்சா பறிமுதல் :  நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் தகவல் !!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் 

6 மாதங்களில் 557 கிலோ கஞ்சா பறிமுதல் :  நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் தகவல் !!

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் இதுவரை 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இணைந்து மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தீவிர சோதனை செய்தனர். இதில், கடந்த 6 மாதங்களில் மட்டும்  48 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து, 557 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சா வழக்கில் தொடா்புடைய 7 பேர் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் 150 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் தகவல் தெரியவந்தால் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81216-க்கு தகவல் அளிக்கலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.