சந்தனக் கட்டைகளை கடத்திய 4 பேர் கைது...
சந்தன மரக்கட்டை வெட்டி கடத்திய 4 பேர் கைது செய்து, சந்தனகட்டைகள் மற்றும் ஆயுதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை | அலங்காநல்லூர் அருகே பாலமேடு பகுதியில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேக படும்படியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை வழிமறித்தனர். போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தாமல் மூவரும் தப்பியோட முயன்ற போது போலீசார் அவர்களை துரத்தி மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த முருகன்(30), சஞ்சீவி(36), மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மணி (26) என்பதும் அவர்கள் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி வனப்பகுதியில் சந்தன மரக்கட்டைகளை வெட்டி கடத்தியதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து சந்தன மரக்கட்டைகள், கோடாரி, அரிவாள், மரஅறுவை இயந்திரம் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பாலமேடு அருகே பாரைப்பட்டியை சேர்ந்த செல்வம் (35) என்பவரையும் கைது செயதனர்.
மேலும் படிக்க | எதிரி நாட்டு நாடகங்களை எப்படி பார்க்கலாம்..! பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை..!