10 வயது சிறுவனை பணம் கேட்டு மிரட்டிய 3 சிறார் கைது:

10 வயது சிறுவனை பணம் கேட்டு மிரட்டிய 3 சிறார், கைது செய்யப்பட்டுள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேல் பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10 வயது சிறுவனை பணம் கேட்டு மிரட்டிய 3 சிறார் கைது:

பொள்ளாச்சி அருகே, நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவன் டியூசன் செல்கிறார். அங்கு, 17 வயதான 3 சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வில்லனாக மாறிய நண்பன்:

முதலில் நண்பர்களாகவே பழகினாலும், பின் அவர்களது நடவடிக்கை சரியில்லாமல் இருந்திருக்கிறது. தொடர்ந்து பணம் கேட்டு அந்த ஒன்பது வயது சிறுவனை தொந்தரவு செய்திருக்கின்றனர். நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் கையில் அதிகமாக பணம் இல்லாத நிலையில், அந்த சிறுவனது போட்டோவையும், அவரது தாயின் போட்டோவையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.

ஆயிரம் பத்தாயிரம் ஆனக் கதை:

பயந்த சிறுவன், தனது வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் அவ்வப்போது ஆயிரம் ரெண்டாயிரம் என பணம் கொடுத்து அவர்களை அமைதி ஆக்கி இருக்கிறார். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் காணாம்ல் போயிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுவனை மிரட்டி கேள்விக் கேட்டுள்ளனர். அப்போதுதான், தன்னையும், தனது தாயின் போட்டோவையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி கேட்டதால் பணத்தை எடுத்துக் கொடுத்தாகக் கூறியுள்ளான்.

போலிசில் புகார்:

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த  சிறுவனின் தந்தை  பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில்  மூன்று சிறுவர்களையும் கையகபடுத்திய போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டம், அச்சுறுத்தி பணம் பறித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், ஆபாச படங்களை சிறார்களிடம் காண்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து சென்றனர். சிறுவர்களா இப்படி செய்தார்கள் என்ற குழப்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.