
சேலம் | வரடேரிகாடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி சாந்தி(35). ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கோஷடி தோவுடா மகன் கோஷடி மரிநியா(28) ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சதீஸ்காகாரா ஆகிய மூவரும் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்து காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு வாகனத்தில் வைத்து நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரமடை காவல் ஆய்வாளர் குமார்,உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செயதுள்ளனர்.அப்போது வாகனத்தில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர் நீதிபதி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.
மேலும் படிக்க | துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!