14 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்... 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது..

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.

14 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்... 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது..

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட கெலமங்கலம் அருகேயுள்ள இருளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அதே பகுதியை சேர்ந்த  14 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாய் அவரை கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். சிகிச்சையில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இருளப்பட்டியை சேர்ந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த அனைத்து  மகளீர் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.