பட்டாக்கத்தியுடன் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய 14 பேர் :  பழிக்கு பழி வாங்க 1 வருடமாக காத்திருந்தவர்கள் கைது !!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கொலை செய்ய திட்டம் தீட்டி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்த 14 வாலிபர்களை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பட்டாக்கத்தியுடன் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய 14 பேர் :  பழிக்கு பழி வாங்க 1 வருடமாக காத்திருந்தவர்கள் கைது !!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு லாட்ஜில் சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கியுள்ள நபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக லாட்ஜின் மேலாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் லாட்ஜை ஆய்வு  செய்த போது அங்கு பட்டா கத்தியுடன்  14 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது 

மேலும் அவர்கள் 14 பேரையும் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடந்த பிறகு 14 பேரில் 9 பேர் பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் என்பது தெரிய வந்தது விசாரணையில் கடந்த 2021ம் ஆண்டு ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விக்கி என்கிற கஞ்சி விக்கி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழிக்கு பழி வாங்குவதற்காக 14 நபர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தமிழ்நாடு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர் 

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ கஞ்சா, இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள் ஒரு கடப்பாரை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர் போலீசார்  குறி வைத்த நபர் திருவல்லிக்கேணி பகுதிக்கு இன்று வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 14 நபர்களும் திட்டம்போட்டு கொலை செய்வதற்காக தமிழ்நாடு லாட்ஜில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (25), பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த பரத்குமார்(20), சாய்காந்த்(19) உள்ளிட்ட நபர்களுடன் பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒன்பது பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்து மீதம் உள்ள இரண்டு பேரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர் 

முக்கிய குற்றவாளியான மூன்று பேரையும் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நடக்கவிருந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டு 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவத்திற்காக ஒரு வருடமாக காத்திருந்து பழிக்கு பழி வாங்க ரூம் எடுத்து தங்கி இருந்த 14 பேரை சென்னையில் போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.