சினிமா பாணியில் போலீஸ் வேடமிட்டு கடத்தல்... 7 பேர் கொலை... அதிரடி கிளப்பிய சம்பவம்... முடிவை பாருங்க!!

சினிமா பாணியில் போலீஸ் வேடமிட்டு கடத்தல்...  7 பேர் கொலை... அதிரடி கிளப்பிய சம்பவம்... முடிவை பாருங்க!!

ஆந்திராவில் போலீசார் போல வேடமிட்டு கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2008ஆம் ஆண்டு துர்காபூரில் இருந்து கல்பாக்கத்திற்கு இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரியை, போலீசார் போல வேடமிட்டு கடத்திய மர்ம நபர்கள், லாரியின் டிரைவர், கிளீனர் ஆகியோரை கொலை செய்து விட்டு, இரும்பு பொருட்கள் மற்றும் லாரியின் உதிரிபாகங்களை விற்று விட்டனர்.

இந்த வழக்கில் முன்னா என்பவர் தலைமையிலான 18 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் போலீசார் போல வேடமிட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் லாரிகளை மறித்து, கடத்திச் சென்று இதுவரை டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்ததாகவும், கடத்திய லாரிகளின் உதிரி பாகங்களை பழைய இரும்பு கடைகளில் விற்று விட்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.

ஓங்கோல் எட்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை முடிவில், முக்கிய குற்றவாளியான முன்னா உட்பட 11 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.