அமமுகவை கலைக்க சொல்லி தினகரனை நெருக்கும் சசிகலா,.அக்காவின் வார்த்தையை காப்பாற்ற போராடும் சசி.! 

அமமுகவை கலைக்க சொல்லி தினகரனை நெருக்கும் சசிகலா,.அக்காவின் வார்த்தையை காப்பாற்ற போராடும் சசி.! 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அம்முக பெரும் தோல்வியை சந்தித்தது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மாவட்டங்களில்  தோல்வியை தழுவியத்துடன் அக்கட்சியின் தலைவர் தினகரனும் கோவில்பட்டியில் தோல்வியை சந்தித்தார். 

இந்த தோல்வியின் பின்னர் அமமுக முகாமே கடும் அமைதியில் இருக்கிறது. அதன் தலைவர் தினகரனும் பெரிதாக எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. தினகரனின் இந்த அமைதி குறித்து அமமுக நிர்வாகிகளிடம் பேசிய போது சசிகலாவுக்கும் தினகரனுக்கு நடந்த விவாதம் பற்றி தெரியவந்தது.   


இந்த விவகாரம் குறித்து அமமுக பிரமுகர்கள் கூறும்போது  சட்டமன்ற தேர்தலில் அமமுகவின் இந்த தோல்வி சசிகலாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தினகரனை சந்தித்த சசிகலா அமமுக கடும் தோல்வியை சந்தித்துவிட்டது. இனி கட்சியை நடத்துவது சரியாக இருக்காது. கட்சியை கலைத்து விடு என்றும் கூறியுள்ளார். மேலும் நாம் அதிமுகவை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.  


ஆனால் நாம் தன் தனிக்கட்சி தொடங்கிவிட்டோம். பிறகு ஏன் அதிமுகவில் சேரவேண்டும். அதிமுகவில் நம்மை மீண்டும் சேர்க்க மாட்டார்கள் எனக் சசிகலாவிடம் சண்டை போட்டுள்ளார் தினகரன். அதையும் மீறி நாம் அதிமுகவில் இணைந்தால் அங்கு நமக்கு எந்த முக்கியத்துவமும் தரமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். 

மேலும் இந்த தேர்தலில் அதிமுகவினர் பல ஆயிரம் கோடிரூபாய் பணம் செலவு செய்திருக்கிறார்கள். நீங்களோ நானோ கட்சிக்கு போனால் இதுபற்றி கேள்வி எழுப்புவோமென்று அவர்களுக்கு தெரியும். விஷயம் இப்படி இருக்க அவர்கள் எப்படி நம்மை கட்சிக்குள் மீண்டும் சேர்ப்பார்கள் என்று கேட்ட அவர், நீங்க பேச பேச ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு இன்னும் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கும் என்று கூறியுள்ளார். 
 
ஆனாலும் மீண்டும் மீண்டும் அமமுகவை கலைக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். சசிகலாவின் இந்த கோரிக்கைக்கு கடைசி வரை தினகரன் மறுக்க என் இறப்பிற்கு பிறகு அதிமுக ஒற்றுமையோடு இருந்து ஆட்சியில் இருக்கும் என மறைந்த அக்கா ஜெயலலிதா சொன்னதை நான் காப்பாற்றியே தீருவேன். அதை நிறைவேற்றாமல் என்  மூச்சு போகாது என சென்டிமென்ட்டாக பேசி மகனை (தினகரன்)  ஒருவழியாக சமாதானப்படுத்தியுள்ளார் சசிகலா.