உள்ளே வந்ததுமே முதல் ஆப்பு முனுசாமிக்கு தான்... சசிகலா வருகையால் டறியலாகும் அந்த கேங்!!

உள்ளே வந்ததுமே முதல் ஆப்பு முனுசாமிக்கு தான்... சசிகலா வருகையால் டறியலாகும் அந்த கேங்!!

அண்மையில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஒருவருக்கொருவர் மறைமுகமாக மோதிக்கொண்டதும், சசிகலா கட்சியில் இல்லாததும் தான் என்று சொல்லப்பட்டன.


இதனால் அதிமுக தொண்டர்கள் சிலர் சசிகலாவிடம் போனில் உரையாடி தாங்கள் மீண்டும் கட்சிக்குள் வரவேண்டும் என தங்களது மனகுமுறல்களை கொட்டிதீர்த்தனர். இதனை பொருமையாக கேட்டுக்கொண்ட அவர், தான் விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் எனவும், கட்சியை சரிசெய்துவிடலாம் எனவும் தொண்டரை சமாதானப்படுத்தியுள்ளார். இந்த ஆடியோக்கள் வெளியாகி தமிழகத்தை பரபரப்பாக்கின.  

நிலைமை இப்படி இருக்க ஒருவேளை சசிகலா அதிமுகவில் காலடி எடுத்துவைத்தால் ஒரு சிலர் கட்சியிலிருந்து காணாமல் போவார்கள் என்றும், அவர்களை சசிகலா கட்சியிலிருந்து வெளியேற்றிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. 

அந்த வரிசையில் முதலில் இருப்பது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தான். தேர்தலுக்கு முன்பே இவர் சசிகலாவை விமர்சித்தது சர்ச்சையாகியிருந்தது. மேலும் ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர் தான் முனுசாமி. இதனால் தான் சசிகலா அதிமுகவுக்கு வந்தால், தான் ஓரம்கட்டப்படுவோம் என நேற்று "சசிகலாவிடம் எந்த அதிமுக தொண்டனும் பேசவில்லை. அவர் அமமுக தொண்டர்களிடம் பேசி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்" என்று சசிகலாவை கடுமையாக விமர்சித்திருந்தார். 

மேலும் தேர்தலுக்கு முன் சசிகலாவை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றோர் தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். அவர்களோடு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு. வைத்தியலிங்கம் போன்ற முக்கிய அதிமுக களையெடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேல் சசிகலா எடுக்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.