ரங்கசாமி-பாஜக மோதலால் செத்துக்கொண்டிருக்கும் புதுவை மக்கள்.! மோதல் முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு.! 

ரங்கசாமி-பாஜக மோதலால் செத்துக்கொண்டிருக்கும் புதுவை மக்கள்.! மோதல் முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு.! 

தமிழகத்துக்கும், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும், ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 2ஆம் தேதி ஒரே நாளில் முடிவுகள் வெளியானது. தொடர்ந்து மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன், 33அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

பொறுப்பேற்றது முதல் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் ஆய்வு, ஆலோசனை என மக்களை கொரோனாவிலிருந்து காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் ஒரே நாளில்  தேர்தல் முடிவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து  மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவரோடு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆனால் புதுவையில் அப்படியே தலைகீழாக இன்னும் அமைச்சர்கள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. 

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறுப்பேற்று வேகமான செயல்பாடுகளால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் புதுவையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 1,00,677 பேர் என்ற உச்சநிலையை அடைந்துள்ளது. அங்கு இதுவரை, 1,455 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அங்கு அமஸிஹா பதவி தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

துணை முதல்வர் பதவி தந்தே ஆக வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. நமச்சிவாயம் கேட்க அதற்கு சம்மதிக்கமாட்டேன் என ரங்கசாமி தீவிரமாக இருக்கிறார். மேலும் பாஜக கேட்ட அமைச்சர் பதவியையும் ஒதுக்க ரங்கசாமி  விரும்பவில்லை. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது புதுவை மக்கள் தான். எப்போது இவர்கள் சண்டை முடிவுக்கு வரும். எப்போது அமைச்சர்கள் பொறுப்பேற்று கொரோனா பாதிப்பை குறைப்பார்கள் என மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.