கேலிக்கூத்தாகும் திமுகவின் வாக்குறுதி,. ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்,.தத்தளிக்கும் திமுக அரசு.!

கேலிக்கூத்தாகும் திமுகவின் வாக்குறுதி,. ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்,.தத்தளிக்கும் திமுக அரசு.!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்போம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசின் வாட் வரியை குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. 

தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதை கடந்த பட்ஜெட் தொடரில் அதிமுக அறிவித்திருந்தது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக அரசின் வருவாய் முற்றிலும் குறைந்து, செலவு பலமடங்காக அதிகரித்தது. தமிழக அரசின் முக்கிய வருவாயாக இருப்பது பெட்ரோல்,டீசல் மீதான வரியும், டாஸ்மாக் மதுபானம் மூலம் வரும் வருமானமே. கொரோனா ஊரடங்கால் இந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இத்தகைய நிலையில் தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கியது. அப்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்போம் என்று கூறப்பட்டிருந்தது. இது சாத்தியமா என்று அப்போதே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் வேறு வகையில் அரசு தனது வருமானத்தை உயர்த்திக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே இதுபோன்ற சாத்தியமற்ற வாக்குறுதிகளை திமுக கொடுத்திருக்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. 

மேலும் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்வெற்றி பெற்றது. முதல் ஒருமாத காலம் கொரோனா பணியில் அரசு முழுக்க ஈடுபட்டதால் பிற விவகாரங்கள் பற்றி பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்வியெழுந்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போதைய நிலையில் பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு சாத்தியமில்லை என்றும், எப்போது விலையை குறைப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை என்றும் கூறினார். இது சமூகவலைத்தளங்களில் கடும் கிண்டலை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் இது குறித்து பேசிய சிலர், பெட்ரோல் விலையை ஐந்து ரூபாயாக குறைக்கவில்லை என்றாலும், கொஞ்சமாவது குறைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.