பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வால் படுதோல்வியை சந்திக்கிறதா பாஜக அரசு? 

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வால் படுதோல்வியை சந்திக்கிறதா பாஜக அரசு? 

மன்மோகன்சிங் ஆட்சியில் லிட்டருக்கு 70  ரூபாயாக இருந்த பெட்ரோல் மோடி ஆட்சியில் 100 ரூபாயை தாண்டி விட்டது. இதனால் உப்பு,புளி.மிளகாவிலிருந்து கட்டிடம் கட்டுவது வரை அனைத்தின் விலையும் உயர்ந்து விட்டது.

இந்த விலையேற்றத்துக்கு முதல் காரணமே பெட்ரோல் விலையேற்றம் தான். அம்பானிக்கும் ஒரு லிட்டர் 100 ரூபாய் தான், அன்றாடம் காட்சிக்கும் 100 ரூபாய் தான். ஆனால் கோடிஸ்வரர்களுக்கு பெட்ரோல் விலை உயர்வால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல் போடவே கடன் வாங்கும் சூழல் தான் தற்போது இருக்கிறது. 

ஆட்சிக்கு வந்ததும் பால் விலையை குறைத்த தமிழக முதல்வர் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. இத்தனைக்கும் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை குறைப்பதாக கூறியிருந்தார். ஒருவேளை கொரோனா பாதிப்பு குறைந்த பின் குறைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளாரோ என்னவோ.! 

தற்போதைய நிலையில் லிட்டர் 42 ரூபாய்க்கு விற்றாலே அரசுக்கு லாபம் கிடைக்கும் நிலையில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பது அரசு மக்களிடம் அப்பட்டமாக கொள்ளையடிக்கும் செயல் தான். 

அதேபோல் அப்போது 500 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை இப்போது 800ரூபாயைத்தாண்டி செல்கிறது. இதனால் மக்களுக்கு பல வகையான செலவுகள் பலமடங்கு அதிகரிக்கிறது. தனி மனிதர் 40 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு விற்றால் அதை குற்றச்செயலாக அரசு கருதுகிறது. 

ஆனால் ஜனநாயகம் என்ற பெயரில் அரசே இப்படி பகற்கொள்ளையில் ஈடுபடுவது மோசடிதானே? மின்கட்டணத்தில் 100 யூனிட் வரை கட்டணமில்லை.அதற்கு மேல் பயன்படுத்துவதைப் பொறுத்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேமாதிரி மாதம் 30 லிட்டர் வரை ரேஷன் அட்டை காட்டி லிட்டர் 60 ருபாய்க்கும் அதற்கு மேல் அரசு நிர்ணயித்த விலைக்கும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.இதனால் ஏழை நடுத்தர மக்கள் நிம்மதியடைவர்.

இல்லாவிட்டால் ஜி.எஸ்.டி க்குள் பெட்ரோல் விற்பனையைக் கொண்டு வந்தால் விலை பெருவாரியாகக் குறைந்து விடுமே? ஒருவேளை பெட்ரோல் விலையையும் சமையல் எரிவாயு விலையையும் குறைக்காவிட்டால் அடுத்தமுறை நிச்சயம் படுதோல்வியை சந்திப்பார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.இதனால் ஏழை நடுத்தர மக்கள் நன்மை பெறுவர் என அரசியல் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.