கொங்கு மண்டல மக்கள் அதிமுக-விற்கு ஓட்டுபோட்டு பழக்கப்பட்டவர்கள்: பெருமையா சொல்லும் சசிகலா!  

கொங்கு மண்டல மக்கள் தலைவர் மீதும் அம்மா மீதும் அதீத பாசம் கொண்டவர்கள், அவர்கள் அதிமுக விற்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள் என இன்று சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நான் பெங்களூருவில் இருந்து வரும் போது அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன். ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை அதனால் அம்மாவின் ஆட்சி இழந்து நிற்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து தொண்டர்கள் அவர்களுடைய மன வருத்தத்தைத் என்னிடம் சொல்கிறார்கள். இந்த கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்து இருக்கிறோம் ஆகையால் இனிமேலும் சும்மா இருக்க முடியாது. தொண்டர்களோடு சேர்ந்து இந்த கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை நிச்சயம் அதனை செய்வேன்.

மிக விரைவில் எல்லாம் சரியாகும். சரி செய்து விடுவேன். சாதி மதம் பார்க்காமல் தான் கட்சியை வளர்த்தோம். நான் எப்படி பார்த்தேன் என்றால் கொங்கு மண்டல மக்கள் தலைவர் மீதும் அம்மா மீதும் அதீத பாசம் கொண்டவர்கள். அந்த மக்கள் அண்ணா திமுக விற்கு தான் ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள்.

எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றுதான் எதார்த்தமாக கொடுத்துவிட்டு சென்றேன். அந்த நேரத்தில் நான் எதைப் பற்றியும் நினைக்கவில்லை. இப்போது நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. விரைவில் வருவேன் கவலை வேண்டாம் என அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.