புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

கூட்டணி தர்மத்தை மீறி பேசிய பாஜக எம்.எல்.ஏக்களுக்கு கூட்டணிக்குள் வலுக்கும் கண்டனம் என். ஆர்.காங்கிரஸ் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காது புதுச்சேரி அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் பேட்டி.

பாஜக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி முதலமைச்சர்ர் ரங்கசாமி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை புறக்கணிப்பதாகவும், பாஜகவிற்கு ஆதரவு தரும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ரங்கசாமி  அலட்சியப்படுத்தி பழிவாங்குவதாக கூறினர். முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.

என்.ரங்கசாமியுடன் ஆலோசனை

இந்நிலையில், என். ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் தனியாக ஆலோசனை செய்து விட்டு பின்பு சட்டப்பேரவையில் முதலமைச்சர்ர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் இருந்துக்கொண்டே பாஜகவினர் விமர்சனம் செய்வதை முதலமைச்சர் கண்டிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி முதலமைச்சர் மீது அவதூறு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய என். ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே முதலமைச்சரைப்பற்றி அவதூறாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிக்கின்றோம் என்றும். எந்த நிலையிலும் எங்கள் கட்சியின் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றவர் நாளை சபாநாயகர் வந்தவுடன் இது குறித்து பேசி முடிவெடுக்கபப்டும் என ஏ.கே.டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.