அட்டாக் பன்னவங்களுக்கு எல்லாம் ஆப்பு,..அடுத்த டார்கெட் மாரிதாஸா? 

அட்டாக் பன்னவங்களுக்கு எல்லாம் ஆப்பு,..அடுத்த டார்கெட் மாரிதாஸா? 

ஒருவரை புகழில் உச்சிக்கு கொண்டுசெல்லும் சமூகஊடகங்கள் தான் ஒருவரை சிறைக்கும் அனுப்புகிறது. ஒருவரின் ஆட்சியில் உக்காரவைக்கும் விடீயோக்கள் ஒருவரை மேலிருந்து கீழ் வீழ்த்தியும் விடுகிறது. நவீன காலத்தில் சமூகவலைத்தளங்களே அனைத்தையும் தீமானிக்கின்றன. அதில் பரவும் சிறிய தவறுகள் கூட அரசியலில் பெரிய தாக்கத்தையும், பெரும் கலவரங்களையும் உருவாக்குகின்றனர். 

இதன் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் பகிரும் தவறான கருத்துக்கள் அதிகம் விவாதத்துக்குள்ளாகின்றன. மேலும் அவதூறு பரப்பும் சிலர்மீது அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் சமூகவலைத்தளங்களில் பிரபலமான மூன்று நபர்கள் மேல் காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

இரு நாட்களுக்கு முன் தனியாக கார் உதிரிபாகங்கள் விற்கும் நபரை நேரில் சந்தித்து மிரட்டியதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் பாசறை செயலாளர் துரை முருகன் மேல் வழக்குபதிவு செய்து அவரை காவல்துறை கைது செய்தது. மேலும் சமூகவலைத்தளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பூ, மற்றும் ஒரு சிறுவர் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த கைதின் போதே திமுக அரசு நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் நபர்கள் மேல் தான் நடவடிக்கை எடுக்கிறது. பாஜக ஆதரவு நபர்களை ஒன்றும் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. 

இந்த விமர்சனத்திற்கு அடுத்த நாளே பதிலடி கொடுத்துள்ளது காவல்துறை. முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக ஆதரவாளரும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து பதிவிடுபவருமான கிஷோர் கே சாமியை கைது செய்தது காவல்துறை. இவர் மீது ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

அது தவிர சினிமா பிரபலங்களையும், முக்கிய அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் எப்படியும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர்கள் இருவரும் அரசியல் ரீதியான பதிவுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் இன்னொரு நபர் சமூகவலைத்தளங்களில் பெண்களை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் மதன் என்ற நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் எளிமையாக வெல்வது எப்படி என்று சொல்லி யூடியூபில் வீடியோ வெளியிட்ட இவரை பலர் பின்தொடர்கிறார்கள். 

இவர் தன்னோடு விளையாடும் பெண்களை இரட்டை அர்த்தத்தோடு பேசியதாகவும், அவர்களை தவறாகப் பேசி அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிடுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதாகவும், அவர்களின் அந்தரங்க புகைப்படத்தை பெற்று அதை விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக இவருக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இவரும் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் உறுதியாக தகவலை கூறுகிறார்கள். 

மேற்கூறிய மூன்று நபர்கள் மீது காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கை சமூகவலைத்தளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இதைப் பற்றி பேசும் பலர், இவர்களைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள், சினிமா நபர்களை அவதூறாகப் பேசும் மாரிதாஸை கைதுசெய்யவேண்டும் என்று கூறுகின்றனர். 

மாரிதாஸ்    என்பவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருபவர். இவர் தவறான தகவல்களை கூறுகிறார் என்றும் பல முறை குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இந்நிலையில் தனது அவதூறு பேச்சிகளுக்காக கூடியவிரைவில் மாரிதாஸ் கைதுசெய்யப்படுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.