மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக டார்சர் கொடுத்த பிரம்மாண்ட சொகுசு அறை கண்டுபிடிப்பு...

சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் சுசில் ஹரி சர்வதேசப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடமான, தனது சொகுசு அறையை சிவசங்கர் பாபா அடையாளம் காட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக டார்சர் கொடுத்த பிரம்மாண்ட சொகுசு அறை கண்டுபிடிப்பு...

சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் சுசில் ஹரி சர்வதேசப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடமான, தனது சொகுசு அறையை சிவசங்கர் பாபா அடையாளம் காட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். அந்த அடிப்படையில் சிவசங்கர் பாபா மற்றும் இரண்டு ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் தன்மையை அறிந்து சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கானது மாற்றப்பட்டது.

இந்நிலையில் டேராடூனில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தலைமறைவாக முயன்று தப்பியோடிய நிலையில், அவரை டெல்லி காசியாபாத்தில் வைத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சிவசங்கர் பாபாவை , சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதன்பின் சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த பிறகு கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றுள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபா-வை அழைத்துச் சென்று பாபாவின் சொகுசு அறையை அடையாளம் காட்டுமாறு தெரிவித்தாகவும்,  அதனையடுத்து பள்ளியில் இருக்கும் சொகுசு அறையை அடையாளம் காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Lounge என கூறப்படும் பிரம்மாண்ட சொகுசு அறையில்தான், மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மாணவிகளும் குறிப்பிட்டு தெரிவித்திருந்தனர். எனவே இந்த வழக்கில் குற்றம் நடந்த இடமான பாபா-வின் சொகுசு அறை முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சி.பி.சி.ஐ.டி போலீசார் முதற்கட்டமாக பள்ளியில் அதிரடி சோதனை நடத்தியபோது பாபா-வின் சொகுசு அறையை பள்ளி ஊழியர்கள் அடையாளம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

மேலும், பள்ளியின் வாசலில் வைக்கப்பட்டுள்ள மேப்பில் (Map) பாபா சொகுசு அறை எங்கு உளது எனவும் காட்டப்படவில்லை. பள்ளி ஊழியர்களை கேட்ட போது அருகில் வேறொரு அறையை காட்டி, இதுதான் சிவசங்கர் பாபாவின் அறையென நாடகம் ஆடியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ஆனால் மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவசங்கர் பாபா-வின் அறையும், பள்ளி ஊழியர்கள் காட்டிய அறையும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது தெரியவந்தது.

இந்த சந்தேகத்தை தீர்க்கவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் சிவசங்கர் பாபா-வை பள்ளிக்கு அழைத்துச் சென்று அவரது சொகுசு அறையை போலீசார் வாகனத்தில் இருந்தபடியே அடையாளம் காட்டுமாறு  தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக இன்னும் மூன்று நாட்களில் சிவசங்கர் பாபா-வை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவலில் எடுத்த பிறகு, சிவசங்கர் பாபாவை நேரடியாக அவரது சொகுசு அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து, விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக மாணவிகளுக்கு எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எந்த குற்றத்திற்காக நீங்கள் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள் என தெரியுமா? என நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா கே.கே நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ஒருவர்  மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சாதகமாக வைத்து, தன்னையும் அதே போன்று பொய்க்  குற்றம் சாட்டி சிறையிலடைக்க இதுபோன்ற கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை தரப்பில் சில ஈமெயில் மற்றும் போட்டோ ஆதாரங்களை நீதிபதி முன்பு  சமர்பிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதனை பார்த்த நீதிபதி உடனடியாக சிவசங்கர் பாபாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்போது தனக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் சிவசங்கர் பாபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கான செலவை தானே பார்த்துக் கொள்வதாகவும் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளார். அதற்கு நீதிபதி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையிலாவது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என மீண்டும் சிவசங்கர் பாபா தரப்பில் வலியுறுத்தப்பட்டு அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.