யாராலும் தடுக்க முடியாது..! இடை நீக்கத்திற்க்கு பின் காயத்ரி ரகுராமின் அதிரடி பதிவு..!

யாராலும் தடுக்க முடியாது..! இடை நீக்கத்திற்க்கு பின் காயத்ரி ரகுராமின் அதிரடி பதிவு..!

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தனுடைய சமூக வலைதளத்தில் அதிரடி பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகள்:

பாஜகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பூசல் நடந்து வருகிறது.  கடந்த மே மாதம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டனர். பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை தேர்வு செய்து வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

K. Annamalai Wiki, Age, Caste, Wife, Children, Family, Biography & More -  WikiBio

காய்த்ரி ரகுராம்:

கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். பதவி பறிக்கப்பட்ட பின் தன்னுடைய சமூக வலைதளத்தில், எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டார். அவரின் அந்த பதிவு பெரிய அளவில் சர்ச்சையானது. 

இதையும் படிக்க: திருச்சி சூர்யாவிற்கு 7 நாள்... காயத்ரி ரகுராமுக்கு 6 மாதம்..! அண்ணாமலை அதிரடி உத்தரவு..!

புதிய பொறுப்பு:

அதன் பின்னர் அவருக்கு, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலைக்கு காயத்ரி நன்றி தெரிவித்தார். அதோடு இந்த பொறுப்பில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அறிவித்தார்.

ட்ரோல்கள்:

காயத்ரியின் பதிவிற்கு பல விமர்சனங்கள் எழுந்தது. பரும் ட்ரோல் செய்தனர். அதில், இதனிடையே பாஜக ஆதரவு ஐடி ஒன்று காயத்ரி பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளது. அதில், ட்விட்டர்ல 4 followers வெச்சுக்கிட்டு PM ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு...தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லானா மானாட மயிலாட போய் choreographer வேலைய பாரு, என்று காயத்ரி தொழிலை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இதை தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் லைக் செய்துள்ளார்.

Image

சோசியல் மீடியா கம்பனி:

இதற்கு காயத்ரி ரகுராம் தனுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், செல்வகுமார் காவி சோசியல் மீடியா கம்பனி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்பனியில் 2000 பேர் இருக்கிறார்கள். என்னை மற்றும் சீனியர் பாஜக தலைவர்களை கிண்டல் செய்வதுதான் வேலை இவர்களுக்கு. பெண்ணான எனக்கு எதிராக குழுவாக அவர்கள் போஸ்ட் செய்கிறார்கள். நான் ஒரு பிரதமரோ, முதல்வரோ அல்லது கட்சியின் தலைவரோ அல்ல, மற்றவர்கள் போல் அந்த லட்சியம் எனக்கு அல்ல. சிலரை போல ஒவ்வொரு போஸ்டுக்கும் போலியான லைக்கோ, போலியான பாலோயர்களோ வைத்து நான் என்னை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உங்களுடைய சோஷியல் மீடியா டீம் என்னை திமுக கைக்கூலி, க்ரிப்டோ, பாஜகவில் இருந்து வெளியேறு என்றெல்லாம் விமர்சனம் செய்கிறது. 

பிரஷாந்த் கிஷோர்?

நான் நடிகை, நடன பயிற்சியாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உங்கள் பின்னணி அவர்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் பெங்களூரில் தலைமறைவாக இருந்தீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் விளம்பரங்களுக்காக நீங்கள் எங்களின் பிரபலமான பாடல்களை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்களை பிரஷாந்த் கிஷோர் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். என்னை இன்னும் சில ட்ரோல் செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை பற்றி நான் கவலைப்படவில்லை, என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்.

காயத்ரி ரகுராம் இடை நீக்கம்:

தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கபடுவதாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

யாரும் தடுக்க முடியாது:

இந்த இடை நீக்கத்திறகு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம், நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன் என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், நான் பாஜகவுக்கு எதிரானவன் என்பதை ஏற்க மாட்டேன். அப்படி யார் சொன்னாலும் அடிப்பேன். எந்த ஒரு தனிமனிதனும் ஒரு கட்சி அல்ல. விசாரணையின்றி அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த முடிவையும் எடுப்பது இப்படித்தான் என பதிவிட்டுள்ளார்.