FACEBOOK உருவாக்கி கொண்டிருக்கும்  ஒரு மெய்நிகர் உலகம் (METAVERSE)...

FACEBOOK உருவாக்கி கொண்டிருக்கும்  ஒரு மெய்நிகர் உலகம்  (METAVERSE)...

வரலாறு நெடுகிலும் தொழிற்நுட்பங்கள் முற்றிலும் ஒரு புதிய துறையையும் அதற்கான வர்த்தகம் பொருளாதாரத்தையும் அதிவேகத்தில் உருவாக்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு இணையமும் அப்படிப்பட்ட ஒரு தொழிற்நுட்பமாக தான் தோன்றியது இன்று அதன் சந்தை உலகில் பல ஆயிரக்கணக்கான கோடிஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. அன்றே அதன் மதிப்பை கணித்தவர்கள் இன்று கோடியில் புரள்கிறார்கள். இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தொழிற்நுட்ப துறை இந்த உலகையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு மாபெரும் பாய்ச்சலை பாய்ந்து கொண்டிருக்கிறது அது தான் மெடாவேர்ஸ் (METAVERSE)

சமூக வலைத்தளங்களின் அரக்கன் என கருதப்படும் FACEBOOKகின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் சமீபத்தில் இந்த மெடாவேர்ஸ் (METAVERSE) பற்றிய தகவலை பகிர்ந்திருந்தார். அதிலிருந்து அணைத்து வெளிநாட்டு ஊடகங்களும் இணையதள வாசிகளும் மனித இனத்தை சிந்திக்கவிடாமல் அடிமைப்படுத்தும் நோக்கத்தின் முதல் கட்டமாக வெளிவந்த சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து இதுதான் பெரிய படி என்றும், மனித இனம் அழிவை நோக்கி கொண்டு செல்வது அப்பட்டமாக தெரிகிறது என்றும் தன் எதிர்ப்புகளை காட்டமாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதோ ஒரு வகையில் மனித இனம் அழியாதான் போகிறது என்று தெரிந்த மக்கள் இதன் மூலம் ஏற்படக்கூடிய பயனிலும், பணத்திலும், லாபத்திலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மெடாவேர்ஸ் (METAVERSE) என்றால் என்ன அது எவ்வகையில் லாபம் பயக்கக்கூடியதாய் இருக்கும் என்பதை விவரிப்பது 20 வருடங்களுக்கு முன்னாள் ஒருவனுக்கு இணையதளத்தை பற்றி விளக்க முயல்வது போன்று சற்று சிரமான செயல் தான். அப்போது சமூக வலைத்தளம் இல்லை, பகிர்வு தளம் இல்லை, யூடுயூபெர்ஸ் இல்லை கான்டன்ட் கிரீடோர்ஸ் இல்லை ஆனால் இவை அனைத்தும் பிற்காலத்தில் உருவாகின. அதுபோன்று எதிர்காலத்தில் நிறைய துறைகள் உருவாதற்கான வாய்ப்பு உள்ள மெடாவேர்ஸீன் அடிப்படைகளை சுருக்கமாக விளக்க முயல்கிறோம் பின்பு அதன் மூலம் மனிதகுலம் அடைவது லாபமா சாபமா  என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

மெட்டா என்றால்  அனைத்தையும் தாண்டி, அப்பால் என்பதை குறிக்கும் வேர்ஸ் என்றால்  உலகத்தை குறிக்கும் சொல். மெடாவேர்ஸ் (METAVERSE) என்பது FACEBOOK உருவாக்கி கொண்டிருக்கும்  ஒரு மெய்நிகர் உலகம். இது விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி, மற்றும் காணொளி உள்ளிட்ட பல தொழில்நுட்ப கூறுகளின் கலவையை கொண்டு காட்சிகளை டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படும் ஒரு மெய்நிகர் உலகம் இந்த உலகில் உங்களுக்கென்ற தனியே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி கொண்டு உலகின் மறுமுனையில் இருக்கும் நண்பர்களுடன் ஆன்லைனில் இணைந்து பணிபுரிவது, விளையாடுவது உலகெங்கிலும் உள்ள தலங்களுக்கு இருந்த இடத்திலிருந்தே மெய்நிகர் பயணம் செல்வது போன்ற செயல்கள் சாத்தியப்படும்.

இதனை தெளிவாக காட்சிப்படுத்தும்  வகையில் வகையில் ஜுராசிக் பார்க், E.T போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஸ்டிவேன் ஸ்பீல்பெபெர்க் 2018 ரெடி பிளேயர் ஒன் (READY PLAYER ONE) என்ற படத்தை இயக்கியிருந்தார் அப்போது ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டுகளை பெறாத அப்படம் இன்று அதேபோல் நிஜத்தில் நடக்க போகிறது என்பதை அறிந்தவுடன் அதன் இயக்குனரை ஒரு தீர்க்க தரிசி என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். 

இந்த மெடாவேர்ஸ் நாம் இப்பொது பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையத்தின் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பான வெப் 3.0 என்கிறார்கள். இப்பொது நாம் பயன்படுத்தும் வெப் 2.0 வில் நமக்கென்று சொந்தமானது எதுவும் கிடையாது. ஒரு வேலை நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருந்தால்  www.malaimurasu.com என்ற டொமைன் நேம் அதாவது கலப்பெயர் மட்டுமே சொந்தமாக வாங்கக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த வெப் 3.0, NFT மற்றும் BKLOCKCHAIN எனப்படும் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தின் உதவியுடன் இணையத்தில் சில பகுதிகளை நமக்கு சொந்தமாக்கி கொள்ள உதவுகிறது. இதனால் வருங்காலத்தில் ஒட்டுமொத்த இணையதளம் என்பது அனைவரின் சொந்த உரிமையாக இருக்கும்.

நாம் உலகின் அதிநவீன தொழிற்நுட்ப புரட்சியின் ஆரம்ப நாட்களில் இருந்து வருகிறோம் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று ஆனால் இதுதான் வருங்காலம் என்று அறிந்தவர்கள் உலகிற்க்கு முற்றிலும் புதியவையான வெப் 3.0, NFT, BKLOCKCHAIN, METAVERSE, போன்றவற்றை பற்றி தொடர்ந்து கற்றுக் கொண்டுள்ளனர். இருந்தும் பலர் இது சமூதாயத்தை மேலும் சீரழித்து மக்களை அடிமையாகும் ஒரு செயலாக பார்க்கிறார்கள். அனால் NIKE, ADIDAS போன்ற ஷூ நிறுவனங்கள் இப்போதே தனது டிஜிட்டல் காலணிகளை விற்பதற்கு காப்புரிமைகள் பெற்றுள்ளனர். இன்னும்பலர் வருங்காலத்தில் டிஜிட்டல் ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆகும் முயற்சியில், மெய்நிகர் உலகில் இடங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனது FACEBOOKகின் பெயரை புதிதாக மெட்டா (META) என்று மாத்தியதோடு அதன் CEO மார்க் ஜூக்கர்பெர்க்மெட்டாவேர்ஸின் முக்கிய அம்சங்கள் பிரதானமாக மாறுவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பிட்டுள்ளார் இருப்பினும் அதன் முக்கிய அம்சங்களான அதிவேக இணைய சேவை, விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் மற்றும் எப்போதும் இயங்கும் ஆன்லைன் உலகங்கள் தற்போதே நிலுவையில் தான் உள்ளன ஆனால் அது பெரும்பாலானோரை சென்றடையாத நிலையில் இன்னும் பத்து வருடத்திற்குள் அது அனைவரையும் அடைந்துவிடும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. சமீபத்திய சந்தை பகுப்பாய்வு, 2024 ஆம் ஆண்டிற்குள் மெட்டாவேர்ஸ் சந்தை வாய்ப்பு $800 பில்லியனாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது

நினைத்த உருவத்தில் நினைத்த வடிவத்தில் நினைத்த இடத்தில் நினைத்ததுபோல் சுதந்திரமாக வாழக்கூடிய அருமையான வாய்ப்பை மெடாவேர்ஸ் நமக்கு ஏற்படுத்தி கொடுக்கும் என்றாலும் நிஜவுலகில் நம் சுதந்திரம் மிகவும் கேள்விக்குரிய ஒன்றாக மாறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ள எதிர்காலத்தை நோக்கி தான் நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.