பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கமா?எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கமா?எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி பிரச்சினை

அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நீடித்து வரும் நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை ஆதரித்ததாக கூறப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்திருந்தார்.

பழனிச்சாமி அறிக்கை

இந்நிலையில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டிருக்கிறார்.

ராமச்சந்திரன் நீக்கம்

இதனால் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் அவர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.