தடுப்பூசி வழங்குவதில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு,.. மோடி அரசின் அறிக்கை மூலம் வெளி வந்த உண்மை.!

தடுப்பூசி வழங்குவதில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு,.. மோடி அரசின்  அறிக்கை மூலம் வெளி வந்த உண்மை.!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என்று கூறப்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசுகள் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றன. 

இந்தியாவை பொறுத்தவரை ஒன்றிய அரசே தடுப்பூசிகளை பெற்று மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது. மாநிலங்கள் நேரடியாக எந்த நிறுவனத்தையும் அணுகி தடுப்பூசி பெறமுடியாத நிலை இருந்தது. தொடர்ந்து வந்த எதிர்ப்பால் சீரம் நிறுவனத்திடமிருந்து மாநிலங்கள் தடுப்பூசி வாங்க அனுமதி கொடுத்தாலும் ஒன்றிய அரசுக்கு கொடுக்கும் விலையை விட அதிக விலையை நிர்ணயித்தது. தடுப்பூசி விலையை நிர்ணயிக்க வேண்டிய ஒன்றிய அரசு தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது. 

ஒன்றிய அரசின் இந்த செயலை நீதிமன்றம் கூட விமர்சித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே ஒன்றிய அரசு அதிக தடுப்பூசிகளை கொடுப்பதாகவும், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்ச இணையதளத்தில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசியையே இதுக்கியுள்ளது தெரியவந்துள்ளது. 


அந்த அறிக்கையில் 7 கோடியே 21 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்துக்கு  96 லட்சத்து 19 ஆயிரம்  தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 7 கோடியே 26 லட்சம் மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்துக்கு  1 கோடியே 18 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 6 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்துக்கு 1 கோடியே 76 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதே போல 6 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்துக்கு 1 கோடியே 76 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்களாகும். 

மேலும் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 11 கோடி மக்கள் தொகை கொண்ட மஹாராஷ்டிராவுக்கு 2 கோடியே 32 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளதும், 9 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்குவங்கத்துக்கு 1 கோடியே 52 லட்சம் தடுப்பூசிகளை கொடுக்கப்பட்டுள்ளது.