சினிமா ஆசை காட்டி தனி அறையில் வைத்து பல கோணங்களில் படம்!! நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த பகீர்...

சினிமா ஆசை காட்டி தனி அறையில் வைத்து பல கோணங்களில் படம்!! நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த பகீர்...

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த, ஆண் நண்பர் மீது நடவடிக்கை கோரி இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கற்பனை கதை தான் சினிமா. இந்த சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலர் விரும்பினாலும், சிலர் அதற்கு முயற்சி எடுத்து, ஊர் விட்டு ஊர் வந்து வாய்ப்புகளுக்காக காத்து இருக்கிறார்கள்.  சிலர் வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கிறது. பலர் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிறு வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மோகத்தில் இருந்துள்ளார் இதனால் தனது நண்பர்கள் மூலம் சென்னைக்கு வந்து  சாலிகிராமம் பகுதியில்  தங்கி சினிமா வாய்யை தேடிவந்துள்ளார்.

இதற்கு இடையில் அடையாறு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் தனக்கு சினிமா இயக்குநர்கள் தெரியும், அவர்களிடம் உனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என கூறி சினிமா ஆசையில் இருந்த சரண்யாவிடம் தெரிவித்துள்ளார். கணேஷை நம்பிய அவர் சொல்லுவதை எல்லம் கேட்டுவந்துள்ளார் சரண்யா, அப்போது  சினிமாவில் நடிப்பதற்கு புகைப்படம் பல கோணங்களில் தேவை என்று  கூறி சரண்யாவை தனி அறையில் வைத்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார். மேலும் அவரை வறுப்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பிறகும் சரண்யாவை விடாத கணேஷ், இரவு நேரங்களில் சினிமா இயக்குனர்களிடம் அறிமுகம் செய்வதாக கூறி சரண்யாவை தனது நண்பர்களை இயக்குனர் என்று பொய் செல்லி அறிமுகம் செய்து வைத்தது மட்டுமின்றி, அவர்களுடனும் பாலியல் உறவு கொள்ள வறுப்புறுத்தியதாக செல்லப்படுகிறது.

இதை எல்லாம் சினிமா மீது  உள்ள மோகத்தால் பொருத்துக் கொண்ட சரண்யா, ஒரு கட்டத்தில் கணேஷ் தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்த இதைப்பற்றி அவரிடம் சரண்யா கேட்டதற்கு, அவர் முறையாக பதில் அளிக்காமல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் சரண்யா.

இந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் சரண்யாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு செல்லும்போது, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை முழுங்கிவிட்டு காவல் நிலைத்திற்கு சென்றுள்ளார். இதனால் செல்லும் வழியிலயே மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு, விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சரண்யா தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். அங்கு, அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், என் வாழ்க்கையை சீரழித்த கணேஷ் தான் ’என் சாவுக்கும் முழு காரணம்’. எனக்கும் எனது குடும்பத்திற்கும் எது நேர்ந்தாலும், அவர் தான் காரணம் என்று எழுதி இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து சரண்யா அளித்த புகார் மீது, அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.