போராட்டம் காடுகளுக்காக...காடு தான் அவர்களின் வாழ்க்கை!

இக்காடுகளை பூர்விகமாக கொண்ட லட்சக்கணக்காண பழங்குடி மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

போராட்டம் காடுகளுக்காக...காடு தான் அவர்களின் வாழ்க்கை!

இந்தியாவில் உள்ள மிக பெரிய காடுகளுள் ஒன்று சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள ஹஸ்தியோ காடுகள். மனிதர்களால் பெரிய அளவுக்கு பாதிக்கப்படாத பழமையான காடு. 4 லட்சம் ஏக்கர் பாரப்பளவு கொண்ட இக்காடு பல்லாயிர கணக்கான விலங்குகள், பல அரிய வகை தவரங்கள், மருத்துவ குணம் கொண்ட முலீகை செடிகள் என இயற்கை எழில் கொண்ட பழமையான காடு.

காடு தான் தாய்

இக்காடுகளை பூர்விகமாக கொண்ட லட்சக்கணக்காண பழங்குடி மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் காடுகளை தங்கள் கடவுளாகவும் தாயாகவும் மதிக்கும் வழக்கம் கொண்டவர்கள். இவர்கள், காடுகளின் ஒரு அங்கமாக, அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். இக்காடுகளின் முக்கியதுவம் புரிந்து மத்திய அரசு, 2009 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு, இக்காடுகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக சட்டபூர்வமாக அறிவித்தது. பின்னர், இப்பகுதியில் நிலக்கரி இருப்பது தெரியவந்தது.

சுரங்கம் அமைத்தால் மக்களுக்கு பாதிப்பு

அமைதியாய் இருந்த பழங்குடிகளின் வாழ்க்கை வன்முறையால் சூழப்பட்டது. நிலக்கரி எடுக்கும் உரிமம் அதானி குழுமத்திற்கு மத்திய மோடி அரசால் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பதிக்கப்பட்ட பழங்குடிகள் போரட்டத்தில் இறங்கினர். தங்கள் கிராம சபைகளில் எங்களுக்கு நிலகரி சுரங்கம் வேண்டாம். எங்கள் காடுகளை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்று கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றினர். ராகுல் காந்தி போரட்ட களத்துக்கு வந்த தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலக்காரி எடுக்கப்படாது என மக்களிடம் உறுதியாளித்தார். இதை மக்கள் நம்பி 2018 இல் காங்கிரஸை ஆட்சியில் அமர்தினர்.சட்டசபையில் நிலகரி சுரங்கத்திற்கு எதிராக தீர்மனமும் நிறைவேற்றப்பட்டது. 

லட்சக்கணக்காண மரங்களை அழித்த அரசு

ஆனால், கடந்த மாதம், தீடிரேன பெரும் போலீஸ் படையின் பலம் கொண்டு காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இதனை சட்ட விரோதம் என்று எடுத்துகூறிய பழங்குடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும்,5 லட்சம் மரங்களை வேட்டி அங்கு நிலகரி சுரங்கம் அதானி குழுமம் அமைக்க உள்ளதாக தெரிகிறது. அங்கு கிராம தலைவராக இருக்கும் மூனிஸ்வர் கூறியது, "எங்கள் வாழ்கை காடுகளை நம்பியுள்ளது. இந்த காடுகளை அழிப்பது எங்கள் இல்லங்களை சூறையாடுவது போல் ஆகும். இந்த காடுகள் எங்கள் முதாதயர்களின் வடிவம். இவர்களை அழித்துவிட்டு நாங்கள் எங்கே செல்வது?", என வினவினார்.

பழங்குடி மக்கள் பேரணி

மேலும், அங்கு வசிக்கும் கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, மரங்களையும் காடுகளையும் அழிக்கும் பணி மும்முறமாக ஆரம்பித்துள்ளது ஆளும் காங்கிரஸ் அரசு. இதனை எதிர்த்து பழங்குடிகள் தங்களுக்கு சட்டபூர்வமாக கொடுக்கப்பட்ட கிராம சபை உரிமைகள், வன உரிமைச் சட்டம் உள்ளிட்டவற்றை நிலைநாட்ட வேண்டும், நிலக்கரி எடுப்பது பருவநிலை மாற்றத்திற்கு வழிவகும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தி, 13 நாள் 300 கிலோ மிட்டர் நடைபயணம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பேரணி அக்டோபர் 14, சத்திஸ்கர் தலைநகர் ராய்பூர்ல் நிறைவு பெற்றது. 

- செல்வம் (சூழலியல் செயற்பாட்டாளர்)

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கருத்து கட்டுரையாளருடையது. நிறுவனத்தின் கருத்தல்ல.