தாலி கட்ட சில நிமிடங்கள் தான்..! சினிமா காட்சி போல நடந்த சம்பவம்..!

மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்ட சில நிமிடங்களே இருந்த நிலையில் மண மேடையிலேயே மணமகன் மீது மயங்கி விழுந்து மனமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாலி கட்ட சில நிமிடங்கள் தான்..! சினிமா காட்சி போல நடந்த சம்பவம்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரவாடா தெலுங்கு தேச கட்சியின் இளைஞரணி தலைவர் சிவாஜி என்பவருக்கும்,  ஸ்ருஜனா என்ற பெண்ணுக்கும் கடந்த புதன்கிழமை இரவு 7 மணிக்கு திருமணம்  நடைபெற இருந்தது.  

திருமண நேரத்திற்கு முன்பே திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து திருமண சடங்குகளும் நடைபெற்றது. அப்போது மணமேடையில் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி, மணமகள் தலையில் சீரகம் வெல்லம் வைத்து நூறு ஆண்டுகள் மணமக்கள் சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும் என புரோகிதர் வேத மந்திரங்கள் முழுங்க சடங்குகள் செய்து கொண்டுருந்தார். 

அந்த இடமே திருமண மகழ்ச்சியில் இருந்த நேரத்தில், ஸ்ருஜனா திடீரென சுயநினைவை இழந்து மணமகன் மடியிலேயே சரிந்தார். இதைக்கண்ட பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரை  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் பெற்றோர்கள். ஆனால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  பரிதாபமாக உயிரிழந்தார் மணமகள் ஸ்ருஜனா.  

இந்த சம்பவம் மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரடைப்பில் மணமகள் இறந்து இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் விஷம் அருந்தியதால் தான் மணமகள் இறந்தது தெரிய வந்துள்ளது.  

திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விடீயோக்கள் வெளியாகி உள்ளது. அதில் மணமக்கள் இருவரும் அதீத அன்புடன் இருக்கின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக அவர் விஷம் குடித்தார்? காதல் தோல்வியா அல்லது விருப்பம் இல்லாத திருமணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.