என்னை பார்த்து அந்த வார்த்தைக் கூற அவருக்கு என்ன அருகதை உள்ளது? அண்ணாமலை ஆவேசம்!

என்னை பார்த்து அந்த வார்த்தைக் கூற அவருக்கு என்ன அருகதை உள்ளது? அண்ணாமலை ஆவேசம்!

தமிழ்நாடு நிதி அமைச்சருக்கும், பாஜக தமிழ்நாடு தலைவருக்கும் சமூக வலைதளைங்களில் வெடித்த வார்த்தை மோதல் பேசுபொருளான நிலையில், தனது பதிவிற்கு விளக்கம் அளித்தும், நிதி அமைச்சரை சாடியும் பேசியுள்ளார் அண்ணாமலை.

காலணி வீச்சு:

மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

ஆடு - காலணி:

அண்ணாமலையை ஆடு என விமர்சித்து, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். மேலும், அவர்கள் அரசியலுக்கு ஒரு சாபக்கேடு எனவும் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக, முன்னோர்களின் முதலெழுத்துகளுடன் மட்டுமே வாழ்பவர்களுக்கு ஒரு விவசாயியின் மகன் வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை என பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: இவர் ஆடுனு சொல்ல, அவர் பதில் சொல்ல... பி.டி.ஆர் - அண்ணாமலை சமூக வலைதளத்தில் அனல் பறக்கும் வார்த்தை மோதல்..! 

வாழ்த்து சொல்லாத முதல்வர்:

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது என எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் தான் அரசியல் செய்கிறார்:

பாஜக மத அரசியல் செய்கிறது என குற்றம்சாட்டுகிறார் முதலமைச்சர். ஆனால் பிரதமர் மோடி எந்த மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருந்தது இல்லை. கிறிஸ்த்துவ, இஸ்லாமிய மத விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்லி, அவர்களுடன் பண்டிகையை கொண்டாடும் முதலமைச்சர் தான் அரசியல் செய்கிறார்.  முதலில் அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு பின்பு பாஜக குறித்து பேசட்டும்  எனக் கூறியுள்ளார். 

நிதி அமைச்சர் இப்படியா பேசுவது?

சமூக வலைத்தளத்தில் இவ்வாறு தரக்குறைவான வார்த்தைகளை தலைவர்கள் பயன்படுத்துவது பின்னால் வரும் இளம் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலாக மாறாத எனக், கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சர் அந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியாகுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் சாபக்கேடு:

அவர் வார்த்தைகளுக்கான பதிலை தான், நான் எனது பதிவில் கொடுத்துள்ளேன். அரசியலுக்கு சாபக்கேடு என்று பி.டி.ஆர். கூறுகிறார். நான் சாபக்கேடா? அவர்கள் தான் சாபக்கேடு, முன்னோர்களின் பெயரை வைத்து அரசியலில் இருக்கும் இவர்களின் முன்னெழுத்துகளை தூக்கிவிட்டால் ஒன்றும் இல்லாமல் போவார்கள் என சாடியுள்ளார்.

எதுவுமே இல்லை:

1941 இல் சுதந்திரம் வேண்டாம் என்று கூறியவர்கள் அவர்களின் முன்னோர்கள். என்னை பார்த்து அந்த வார்த்தைக் கூற அவருக்கு என அருகதை உள்ளது. திமுகவில் யாருக்கும் அந்த அருகதை இல்லை. வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் பழைய சரித்திரத்தை  மறைத்துவிட்டு இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என ஆவேசமாக சாடியுள்ளார்.