சசிகலா பேச பேச அலறும் மாஜிக்கள்,.. அடுத்தடுத்து தீர்மானத்தால் வெளிப்படும் பயம்.! 

சசிகலா பேச பேச அலறும் மாஜிக்கள்,.. அடுத்தடுத்து தீர்மானத்தால் வெளிப்படும் பயம்.! 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். சசிகலா ஒதுங்கிவிட்டதால் இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மோதல் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ஆடியோக்கள் மூலம் தன் அரசியல் வருகையை அறிவித்திருக்கிறார் சசிகலா.

அந்த ஆடியோக்களில் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா, அதன் பின் முன்னாள் எம்.எல்.ஏவிடமும் பேசினார். மேலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சசிகலாவிடம் பேசிய 15 அதிமுகவினரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக முதல்முறையாக இதனால் சேலம்,விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் மாவட்டசெயலாளராக இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே சசிகலாவால் அமைச்சராக்கப்பட்டவர்கள் தான். 

அதோடு சசிகலா முதல்வராக வேண்டும் என்று மொட்டை அடித்து வேண்டுதல் எல்லாம் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தனது மாவட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். . மேலும் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் அதிமுக தொழில்நுட்ப அணியும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

அதோடு அரசியலில் இருந்து விலவதாக கூறிவிட்டு ,தற்போது அதிமுகவில் நிர்வாகிகளோடு பேசும் சசிகலாவை கண்டித்தும்,அவர்களோடு பேசுபவர்களை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இப்படி சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றிவருவதைப் பற்றி சசிகலா ஆதரவாளர்கள் கூறும்போது இப்படி சசிகலாவை கண்டித்து தீர்மானம் போடுபவர்கள் எல்லாம் சசிகலாவால் வளர்ந்தவர்கள் தான். இப்போது சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் அவருக்கு தொண்டர்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. இந்த பயத்தில் தான் அதிமுக தலைவர்கள் இப்படி தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள், கூடிய விரைவில் தொண்டர்கள் ஆதரவோடு கட்சியை சசிகலா கைப்பற்றுவர் என்று ஆவேசமாக கூறினார்கள். 

அதிமுகவை பொறுத்தவரை எப்போது எது நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. கடந்த ஐந்து வருடங்களில் அதிமுக எத்தனையோ மாற்றங்களை பார்த்துவிட்டது. இனியும் பார்க்காமல் அல்லது பார்க்காமலே போகலாம்.