உச்ச நீதிமன்றத்தில் பரபர..! எடப்பாடிக்கு நோ சொன்ன நீதிபதிகள், ஓங்கிய ஓபிஎஸ்ஸின் கை..!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் முக்கியமான கோரிக்கை ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிளவுபட்ட அதிமுக:
ஜுலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கபட்ட பின் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் எதிர் அணியினை கட்சியில் இருந்து நீக்குவது, தங்களது ஆதரவாளர்களுக்கு புது பதவி கொடுப்பது என தொடர்ந்து வருகிறது.
இரு நீதிபதிகள் அமர்வு:
தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, அதை விசாரித்த இரு அமர்வு நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தொடர்ந்து வருகிறார் இபிஎஸ்.
உச்ச நீதிமன்றம்:
இரு அமர்வு நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பாக வைரமுத்து என்பவர் தங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க கோரும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஓபிஎஸ்ஸும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிக்க: இனி எப்போதும் அதிமுக அதை பெற முடியாது...கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!
இபிஎஸ்க்கு கேள்வி:
உச்ச நீதிமன்றம் அண்மையில் இந்த வழக்கை விசாரித்த போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் இருக்கும் போதும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அவசரம் காட்டப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. மேலும் இபிஎஸ் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இபிஎஸ் பதில் மனு:
இபிஎஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமானது. ஆகையால் ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய மாற்றம்:
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி விசாரித்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதிய அமர்விற்கு மாற்றப்பட்ட உடன் வழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியது.
இபிஎஸ் கோரிக்கை:
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. வழக்கில் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். இதனால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இன்றே வழக்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
புதிய அமர்வு:
பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு புதிய அமர்விற்கு மாற்றப்பட்டால் அதே நாளில் விசாரணை நடக்காது. பழைய வழக்கில் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் படித்து வழக்கின் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் அதே நாளில் விசாரணை நடத்தப்படாது.
இதையும் படிக்க: திரும்ப.. திரும்ப பேசுற நீ.. முதலமைச்சரை அவதூறாக பேசியவர் கைது
ஓபிஎஸ் எதிர்ப்பு:
வழக்கி விரைந்து விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வத்தார். இதற்கு ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று ஓ.பன்னீர்செல்வமும் பதில் மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும், வழக்கில் தன்னுடைய நிலைப்பாடு பற்றி அவரும் பதில் மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மாறாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் நேரம் கேட்டார்.
இபிஎஸ்க்கு நோ:
இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
கட்சி தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார் இபிஎஸ்.