வலிமையில் வில்லனுடன் இருக்கும் "டாட்டூ" பெண் யார் தெரியுமா? பார்த்து பார்த்து உருகும் தமிழ் ரசிகர்கள்

வலிமை படத்தில் வில்லனுக்கு girl பெஸ்டியாக நடித்துள்ள வி.ஜே பனி- க்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். யார் அந்த வி.ஜே பனி 

வலிமையில் வில்லனுடன் இருக்கும் "டாட்டூ" பெண் யார் தெரியுமா? பார்த்து பார்த்து உருகும் தமிழ் ரசிகர்கள்

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் வலிமை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக, உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் வலிமை வெளியானது.

 இப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டாலும், பொது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுவருகிறது.

என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வலிமை படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 100 கோடி மைல்கல்லைத் தாண்டிய ‘வலிமை’ நேற்று 150 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது.

மேலும் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் இப்படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, விஜே பனி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக விஜே பனி நடித்திருந்தார். அவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளார்.

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த இவரின் நிஜ பெயர் குர்பாணி ஜட்ஜ். ஒரு நேஷனல் மீடியாவில் தொகுப்பாளராக பணியாற்றிய, 
பனி பின்னர் விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.  

கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள விஜே பனி இந்திய ஃபிட்னஸ் மாடல் அழகியாக வலம் வருகிறார். அதன் பின்னர் 2007ம் ஆண்டு வெளியான ஆப் கா சூருர் என்ற படத்தில் ஹன்சிகாவுக்கு நண்பிகா நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் பனி. ஹிந்தி மட்டுமில்லாமல் பஞ்சாப், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் பாலிவுட் பிக் பாஸ் நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டு முதல் ரன்னர் அப் ஆனார்.  கடந்த 2019 ஆம் அமேசான் பிரைமில் வெளியான  ”ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்” வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வந்த பனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு, தனக்கென ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.

அதுவும் அவர் உடல் முழுவதும் பதித்திருக்கும் டாட்டூக்கு ரசிகர்கள் அடிமை.  இன்ஸ்டாகிராம் மட்டும் 1. 5 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்ட பனி, தனது ஃபிட்னஸ் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது வலிமை படத்தில் வில்லனுக்கு girl பெஸ்டியாக நடித்துள்ள பனி- க்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.