கோலிக்கு பதிலாக இந்திய அணிக்கு இனி ரோகித் சர்மாதான் கேப்டன்? விரைவில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார் விராட் கோலி...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் மட்டும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கோலிக்கு பதிலாக இந்திய அணிக்கு இனி ரோகித் சர்மாதான் கேப்டன்? விரைவில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார் விராட் கோலி...

2014ஆம் ஆண்டு டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட்  உள்ளிட்ட மூன்று வகையான போட்டிக்கும் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். கோலி தலைமையிலான இந்தியா அணி பல வெற்றிகளை பெற்றாலும் ஐசிசி தொடரை ஒரு முறை கூட வெல்லவில்லை என்ற குறை மட்டும் கோலியை சுற்றி வலம் வருகிறது.

 இந்த நிலையில் தான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித சர்மாவிடம் அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர். மேலும் கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் கொடுத்தால் கோலிக்கு பணி சுமை குறையும் மற்றும் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்த முடியும் எனவும் கூறி வந்தனர்.

 மேலும் ஐசிசி தொடருக்கும் கோலிக்கும் ராசி இல்லை என சமூகவளைதங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் அது தான் உண்மையும் கூட கோலி தலைமையில் ஐசிசி தொடரில் 2017ஆம் ஆண்டு சாம்பியன் டிரபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் தோல்வி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி வரை  சென்று தோல்வியடைந்தது. அந்த தொடரில் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் பிரச்னை இருந்து வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

ஆம் நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டை இழந்து தடுமாறி கொண்டிருந்தது.அப்போழுது டோனியை களமிறங்க கோலியிடம்  சொன்னாராம் ரோகித் சர்மா ஆனால் ஹர்திக் பாண்டியவை டோனிக்கு முன்னாள் களமிறங்கிவிட்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் கசிந்தன.

 இந்த பிரச்சனையில் தான் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோகித் சர்மா அன்பலோ செய்தார் என்று கூட செய்திகள் உலா வந்தன. இது போல பல முறை இருவருக்கும் முடிவு எடுப்பதில் பல பிரச்னைகள் வந்ததுள்ளது.

 இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரின் ஒன்றுமையை காண முடிந்தது. ஆம் மைதானத்தில் கோலி செய்யும் சேட்டைகளை பார்த்து ரசித்து சிரிப்பதும் சிலிப் பீல்டிங்கில் ரோகித் சர்மா கேட்ச் பிடித்தாலும், கோலி கேட்ச் பிடித்தாலும் இருவரும் துள்ளி குதித்து கொண்டாடுவதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

சமீபத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியில் விளையாடமல் இருந்த தமிழக வீரர் அஸ்வினை அணியில் எடுக்க சொன்னதே ரோகித் சர்மாதானம். கொரோனா தொற்று காரணமாக கடந்த முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய அஸ்வின் சுழல்பந்து வீச்சாளராக நன்றாக விளையாடி ரன்களை கட்டுப்படுத்தினார். நான் பேட்டிங் செய்யும்போது  அவரது ஓவரை அடிக்க கடினமாக இருந்ததாக தேர்வு குழுவினரிடம் ரோகித் சர்மா கூறினாராம்.

இதனால் இந்த முறை ஐபிஎல் முடிந்த பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி20 உலகக்கோப்பை நடைபெறுவதால் அஸ்வினை எடுத்தால் இந்திய அணிக்கு மேலும் பலம் கிடைக்கும் என்றும் கடந்த காலங்களில் அஸ்வின் ஜடேஜாவும் அணிக்கு பல முறை வெற்றியை தேடி தந்துள்ளனார். இதனால் தான் சஹாலுக்கு பதிலாக அஸ்வினை எடுக்கலாம் என ரோகித் சர்மாதான் யோசனை கொடுக்க  அதற்கு கேப்டன் கோலியும்  வரவேற்பு தெரிவிக்கவே அப்படியதான்அஸ்வின் அணியில் இடம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த நிலையில் தான் மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை வகிப்பதால், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாகவும் குறைந்த ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியை துறக்க கோலி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.அவருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடரில், மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாகவும் இருக்கும் ரோகித் சர்மா, புதிய கேப்டனாக பொறுப்பேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு விராத் கோலியே தனது பதவி விலகல் முடிவை அறிவிப்பார் என்றும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராத் கோலி தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் 50ஓவர் உலக்கோப்பை தொடர் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே உள்ளதால் கோலியின் இந்த முடிவு சரியானது தான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.