மோடி வருகை...ஓபிஎஸ் ஈபிஎஸ் போட்ட பிளான் நடக்குமா?

மோடி வருகை...ஓபிஎஸ் ஈபிஎஸ் போட்ட பிளான் நடக்குமா?

சென்னைக்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியாக சந்திக்க ஈ பிஎஸ், ஓ பிஎஸ் இருவரும் பிளான் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக உட்கட்சி பூசல்: 

அதிமுகவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே ஒற்றைத் தலைமை பிரச்னையை ஒட்டி அதிகாரப்போட்டி வெடித்து வருகிறது. இன்றளவும் ஈ பிஎஸ்க்கும் பிஎஸ்க்கும் இடையே அதிகாரப்போடியானது அணையா நெருப்பாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பேச்சானது அரசியல் அரங்கில் வட்டமடித்து வருகிறது. 

தமிழகம் வரும் பிரதமர்:

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். அவரை வரவேற்க அதிமுக சார் பில் ஓ பிஎஸ்சும், ஈ பிஎஸ்சும் மதுரை செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பிரதமரை சந்திக்கவும் அவர்கள் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி ஓ பிஎஸ், ஈ பிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசுவாரா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: ஈ. பி.எஸ் - ஓ. பி.எஸ் இருவரையும் ஒன்றிணைப்பாரா மோடி..?...ஜூலை 28 -ல் நடக்கப்போவது என்ன?

பிஎஸை சந்திக்க மறுத்த நரேந்திர மோடி:

அதற்கு காரணம், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு   பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற பிஎஸ், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், நேரம் வழங்கப்படாத காரணத்தால் ஈ பிஎஸ் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். 

பிஎஸ் மற்றும் ஓ பிஎஸ் இருவரையும் சந்திக்காமல் சென்ற மோடி:

அதேபோன்று, கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம் பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வருகை புரிந்தார். அப்போதும் ஓ பிஎஸ் மற்றும் ஈ பிஎஸை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி சந்தித்தால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி சென்னை வந்த போது ஈ பிஎஸ்சும், டெல்லி திரும்பும் போது ஓ பிஎஸ்சும் விமான நிலையத்தில் சந்தித்தனர். 

இந்த பயணத்திலாவது சந்திப்பாரா?:

இந்த பின்னணியில், தற்போது திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, ஓ பிஎஸ் மற்றும் ஈ பிஎஸ் இருவருக்கும் சந்திப்பதற்கு நேரம் வழங்குவாரா? அப்படி வழங்கினால் அதிமுக பிளவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் இருவரிடமும் பேசுவாரா? அல்லது வேறு முக்கியத் தலைவர்களிடம் பேசிக்கொள்ளுமாறு அறிவுறுத்துவாரா? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வல்லுனர்களிடையே நிலவி வருகிறது.