மறுபிறவி பற்றிய படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெறுவது ஏன்? மறுபிறவி உண்மை சான்றுகளுடன்...!

மறுபிறவியை அடிப்படை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சியாம் சிங்கா ராய், அனேகன், டாக்சி வாலா, நெஞ்சம் மறப்பதில்லை, சைத்தான் இந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களே.

மறுபிறவி பற்றிய படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெறுவது ஏன்? மறுபிறவி உண்மை சான்றுகளுடன்...!

மறு பிறவி குறித்த அறிவியல் உண்மைகள் சான்றுகளுடன். 

அறிவியல் தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சி அடைந்து வரும் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், மனிதனுக்கு மறு பிறவி என்பது உண்மையா? என்ற கேள்வி எழும் போது, பலருக்கு இது எல்லாம் தேவை இல்லாத விவாதம் என்று கேட்கத் தோன்றும். 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் இறந்த தங்கள் முன்னோர்களை தாழிகளில் வைத்து புதைத்த எண்ணற்ற சாட்சிகள் அகழாய்வு பணிகளின் போது கிடைத்திருக்குறது. இந்தியாவில் மட்டும் இல்லை உலகின் அனைத்து நாடுகளிலும் தாலிகளிலும், பிரமிடுகள் அமைத்ததும் இறந்தவர்களின் உடலையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். 

அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், அதற்கான விடை மிகவும் சுவாரசியமானது.  இது இறந்தவர்கள் அவர்களின் பொருட்களை பயன்படுத்துவார்கள், அவர்கள்  மீண்டும் மறுபிறப்பு எடுத்து வருவார்கள் என்ற மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று கூறப்பட்டதன் பொருள், முற்பிறவியில் செய்த பாவ புண்ணியம் அடுத்த பிறவியிலும் தொடரும் என்பதாகும். இது முந்தய காலத்தில் வாழ்த்த மக்களின் நம்பிக்கையே தவிர இன்றைய காலகட்டத்தில் இந்த நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட முடியாது. 

மறுபிறவியை அடிப்படை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சியாம் சிங்கா ராய், அனேகன், டாக்சி வாலா, நெஞ்சம் மறப்பதில்லை, சைத்தான் இந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களே. இது மக்களுக்கு இன்றும் மறுபிறவியில் நம்பிக்கை உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. 

இயன் ஸ்டீவென்சன் ஒரு மனநல மருத்துவர். இவர் 1957ல் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனநலத்துத் துறைத் தலைவராக இருந்தவர். இவர் ஆன்மீக உளவியல் (Parapsychology) என்ற துறையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். ஆன்மிக உளவியல் என்பது தொலைவிலுள்ள பொருட்களைத் தொடாமல் நகர்த்தல், மறுபிறப்பு, மரண அனுபவம், ஆவியுடன் தொடர்பு மற்றும் பிற இயல்புக்கு ஒவ்வாத உளவியல் சார்ந்த ஆய்வாகும்.

ஸ்டீவென்சன் குழைந்தைகள் மறுபிறப்பு பற்றி பேசுவதை கேள்விப்பட்டுள்ளார். அவ்வாறு பேசிய குழந்தைகளைத் தேடிச் சென்று அது குறித்த தகவல்களை அவரே சேகரித்துள்ளார். அந்த வகையில்  உலகம் முழுவதிலும் சுமார் 3000  குழந்தைகள் தங்களது மறு பிறப்பு பற்றி பேசியுள்ளனர். இந்தியா, இலங்கை, நேபாள், பர்மா,பிரான்ஸ் என்று பல நாடுகளுக்கு சுற்றி அது பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். 

அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மறுபிறவி பற்றி பகிர்ந்த 3000 குழைந்தைகள் இரண்டு முதல் ஆறு வயதிற்குள் உள்ளதாகவும், இவர்கள் அனைவரும் மற்ற சராசரி குழந்தைகளை விட மிகவும் அதிக புத்திசாலிகளாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை பெரியவர்கள் யாரும் முற்பிறவியை பற்றி கூறவில்லை என்றும், இவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் அகால மரணம் அடைந்ததாகவும் டீவென்சன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த குழந்தைகள் அனைவரும் முற்பிறப்பில் பெண்ணாக இருந்தால் பெண்ணாகவும், ஆணாக இருந்தால் ஆணாகவும் மறுபிறவி எடுத்ததாக கண்டறிந்துள்ளார். இதில் அறுபது சதவீத குழந்தைகள் மறுபிறவியை நம்பும் இந்து மற்றும் புத்த மதத்தை சார்ந்த குடும்பங்களில் பிறந்ததாகவும், நாற்பது சதவீத குழந்தைகள் மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத கிருஸ்துவ, இஸ்லாமிய குடும்பங்களில் பிறந்ததாகவும் கண்டறிந்துள்ளார். 

மேலும் அந்த குழந்தைகள் முற்பிறவியில் இருந்த அதே மச்சங்கள், தழும்புகளை கண்டறிந்திருப்பது வியப்பாக உள்ளது. சுமார் 34 ஆண்டுகளாக ஸ்டீவென்சன் தேடி கண்டறிந்த முற்பிறவி நிகழ்வுகள் 225 ஆகும். இவை அனைத்தையும் அவர் 2268  பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள ஒரு நிகழ்வை இப்போது பார்க்கலாம். 

இலங்கையில் ஒரு குடும்பத்தில் ஒரு அம்மா "கட்டராக்கம்மா" என்ற ஊர் பெயரை கூற, அதைக் கேட்ட மூன்று வயது குழந்தை தன் முற்பிறவி பற்றி பல விஷயங்களைக் கூற ஆரம்பித்திருக்கிறாள். அதாவது, அந்த குழந்தை முந்தைய பிறவியில் கட்டராக்கம்மாவில்  பிறந்ததாகவும், தன் மனவளர்ச்சி குன்றிய சகோதரர் தன்னை ஆற்றில் தள்ளிவிட்தால் நீரில் மூழ்கி இறந்ததாகவும், தன் பூர்வஜென்ம தந்தைக்கு வழுக்கை தலை எனவும், தந்தையின் பெயர் கெராத் எனவும் அவர் கட்டராக்கம்மாவில் உள்ள புத்த கோவில்லின் அருகில் பூ வியாபாரம் செய்வதாகவும் தான் வாழ்ந்த வீட்டில் கண்ணாடி மேற்கூரை இருந்ததாகவும் அந்த வீட்டின் பின்னால் ஒரு நாய் கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு தினமும் இறைச்சி உணவு கொடுத்து வளர்க்கப்பட்டதாகவும், அந்த வீட்டின் அருகில் ஒரு இந்து கோயில் உள்ளதாகவும் மேலும் அங்கே மக்கள் அதிகமாக தேங்காய் விடலை போடுவதாகவும்  கூறியிருக்கிறாள். 

ஸ்டீவென்சன் பின்னர் கட்டராக்கம்மாவுக்குச் சென்று என்ன நடந்தது எனப் பார்த்துள்ளார். அந்தக் குழந்தைக் கூறியது போல் அங்கே  பூ வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி இருந்திருக்கின்றார். அவரும் புத்த கோயில் அருகில்தான் வியாபாரம் பார்த்து வருகிறார். ஆனால் அவருக்குத் தலையில் நிறைய முடி இருந்துள்ளது. அவரது தாத்தாவிற்கு தான் தலை வழுக்கையாக இருந்துள்ளது. வியாபாரியின் பெயர் கெராத் இல்லை. ஆனால் அந்த குடும்பத்தில் கெராத் என்ற பெயருள்ள வேறு ஒருவர் இருக்கிறார். மேலும் அவர் தன் இரண்டு வயதுக் குழந்தை மனவளர்ச்சி குன்றிய மகனுடன் ஆற்றங்கரையில் விளையாடிய போது தண்ணீரில் விழுந்து இறந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எப்படி ஆற்றில் விழுந்தாள் என்பது அவருக்குத் தெரியவில்லை. அந்த பூ வியாபாரி வீட்டில் நாய் வளர்க்கவில்லை. ஆனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் நாய் வளர்த்து வந்துள்ளார். அதற்கு தினமும் இறைச்சி போட்டு வந்துள்ளதையும் அவர் அறிந்துள்ளார்..

பூ வியாபாரிகும் அந்த குழந்தையின் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதற்கு முன்னாள் அவர்கள் சந்தித்ததும் இல்லை. பின் எவ்வாறு இந்த குழந்தையால் இத்தனையையும் விபரமாகச் சொல்ல முடிந்தது?

தண்ணீரில் மூழ்கி இறந்த அந்த இரண்டு வயதுக் குழந்தை தான் இப்போது மறுபிறவி எடுத்துள்ளது என்கின்றார் ஸ்டீவென்சன்.

ஸ்டீவென்சனின் மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியில் கண்டறிந்து கூறிய முக்கியமான முடிவு என்னவென்றால், மறுபிறவி பற்றிப் பேசும் குழந்தைகளின் பிறப்புக்கும் முற்பிறவியில் அவர்கள் இறந்த காலத்திற்கும் இடையே சராசரியாக 16 மாதங்கள் இருப்பதாகக் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஒருவர் இறந்த பின் அவரின் ஆன்மா 46 நாட்கள் மறுபிறவிக்காகவோ அல்லது முக்திக்காகவோ காத்திருக்கும் என்று புத்த மதத்தினர் நம்புகின்றனர். அந்த நாளில்  இறந்தவருக்கான மதச்சடங்குகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் இறந்தபின் 41ஆம் நாள் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

இந்த நாள் வரை இறந்தவரின் ஆன்மா அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றி வருவதாகத் தமிழகத்திலுள்ள பல மக்கள் நம்புகின்றனர். மேலும் இறப்பிலிருந்து 16வது நாளை உத்தரகிரியை (கருமாதி), முப்பதாவது நாள் மாசியம், மேலும் வருடா வருடம் திதி கொடுப்பது உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.  பெரும்பாலான மக்களின் நம்பிக்கையும் மருத்துவர் ஸ்டீவென்சனின் ஆராய்ச்சி முடிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. காரணகாரியமாகவே தமிழக மக்கள் இந்த சடங்குகளை நடத்துகின்றார்களோ என நம்பத் தான் தோன்றுகின்றது. 

ஆனால் , இவ்வாறு குழந்தைகள் சொல்லும் கதைகளை சேகரிப்பதை விட்டுவிட்டு அறிவியல் பூர்வமாக மறுபிறப்பை யாராவது நிரூபிப்பாரா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது வரையில் இம்மாதிரியான கதைகளின் அடிப்படையில் மறுபிறப்பு உண்டு எனக் கூறுவதை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நானும் தான்.