அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு? உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன?

எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் - உச்சநீதிமன்றம்..!

அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு? உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன?

தலைமை அலுவலகத்தில் தகராறு: கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தற்காலிக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு, வாகனங்களை சேதப்படுத்தினர். 

தலைமை அலுவலகத்திற்கு சீல்: இதையடுத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். 

ஈபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு: இதனை எதிர்த்தும், சாவியை வழங்கக் கோரியும், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஈபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: அதிமுக ஓபிஎஸ்-க்கு.. அதிமுக அலுவலக சாவி யாருக்கு? 2 ஆப்ஷன்கள்..!

ஈபிஎஸ் வசம் சாவி ஒப்படைப்பு: அதன்படி, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க வருவாய்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு: இதனிடையே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  

எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ்: அப்போது வழக்கை முழுமையாக விசாரித்ததற்கு பிறகே எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்றும், வழக்கில் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும் தெரிவித்தது.

இடைக்கால தடை விதிக்க வேண்டும்: முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆதலால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரினார். 

ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு: ஆனால் வழக்கை தீர விசாரித்ததற்கு பிறகே எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என தெளிவுப்படுத்திய நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.