இந்திய அரசியல் தலைவர்கள் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மற்றும் வசதி என்ன? இதோ அந்த தகவல்!!!.

ஒட்டுமொத்த இந்திய ஜனத்தொகையில் 34.49% மக்கள் தான் கார் வைத்துள்ளனர் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது பலருக்கு கார் என்பது கார் என்பது ஆடம்பரத்தின் அடையாளம் அதிலும் விலையுயர்ந்த கார் வைத்திருப்பது என்பது சமூகத்தில் அவரவர் நிலையை சுட்டி காட்டுகிறது அப்படிருக்கையில் மக்களின் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் எப்படிபட்ட வாகனங்களை வைத்துள்ளனர் என்பதை இந்த காணொளியில் காண்போம்.

இந்திய அரசியல் தலைவர்கள் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மற்றும் வசதி என்ன? இதோ அந்த தகவல்!!!.

1. Narendra Modi
இந்திய பிரதமரான நரேந்திர மோடி உயர்-பாதுகாப்பு வசதிகளை கொண்ட 7 சீரிஸ் பதிப்பான BMW 760d , டொயோட்டா லேண்ட் குரூசர் மற்றும் மஹேந்திர ஸ்கார்பியோ போன்று பல வாகனங்களில் அவ்வப்போது வருகை தந்தாலும் இப்பொது தொடர்ச்சியாக RANGE ROVER HSE காரில் காட்சியளித்து வருகிறார் பாதுகாப்பை காரணம் கருதி தோட்டா துளைக்காத அதிக சொகுசு வசதிகளை கொண்ட இந்த காருக்கு மாறியுள்ளார் என்று தெரிகிறது. தற்போதைய சந்தை மதிப்பின்படி இந்த காரின் விலை 3.75 கோடி என்பது குறிப்பிட தக்கது.

2. Amit Sha:
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் அமித்ஷா இவர் வைத்திருக்கும் TOYOTA FORTUNER, SAFARI போன்ற கார்களில் அவருக்கு மிகவும் பிடித்தமானது டொயோட்டா லேண்ட் குரூசர் இந்த காரின் மதிப்பு 1.75 கோடி ஆகும் 

3. MK Stalin:
முதன்முறை தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் அவரின் கார் கலக்ஷனில் பல கார்களை வைத்துள்ளார் சமீபத்தில்,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன இணைய போரட்டலில் ஸ்டாலினால் அக்டோபர் 2021 இல் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 எஸ்இ வேரியண்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இந்த காரின் மதிப்பு 1,12 கோடி ஆகும்.

4. Aravind Kejerwal 
அரவிந்த் கேஜ்ரிவால் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) காரக்பூரில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர். 2012 ஆம் ஆண்டில், அவர் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி  2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார் மிகவும் பணிவு மிக்க முதல்வர் என்று மக்களால் அதிகம் பாராட்டப்படுபவர், இவர் வைத்திருக்கும் கார் மஹிந்திரா ஆல்டுரஸ் இதன் மதிப்பு 29.77 லட்சம்.

5. Pinarayi Vijayan
பினராயி விஜயன், கேரளாவின் தற்போதைய முதலமைச்சர், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர், அவர் CPI இன் கேரள மாநிலக் குழுவின் நீண்ட காலம் செயலாளராக இருந்தவர் .இவர் 30.43 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கிரிஸ்டா காரை வைத்திருந்தார் ஆனால் சமீபத்தில் 62.46 லட்சம் மதிப்பிலான  டாடா ஹாரியர் காருக்கு மாறியுள்ளார்.

6. Yogi Adityanath
யோகி ஆதித்யநாத் பாஜகவை சேர்ந்த அரசியல்வாதி தன்னை ஒரு இந்திய இந்து துறவி என்று கூறிக்கொண்டு  2017 சட்டமன்றத் தேர்தலில் 325 இடங்களைக் கைப்பற்றி, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை தனித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து தற்போதைய முதலமைச்சராக பணியாற்றி வருகிறார் இவர் உ பியின் 22வது முதல்வர் ஆவர் வெகு அளவில் இந்துமக்களின் ஆதரவை பெற்ற இவர் பயன்படுத்தும் கார் 
யோகி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது பதவிக் காலத்தில் 2012-2017 பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350 D இதன் விலை மதிப்பு 88.18 லட்சம் 

7. Mamata Banerjee
மம்தா பானர்ஜி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கல்வியாளர் ஆவார், அவர் 2011 முதல் இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சராக பணியாற்றுகிறார், மேற்கு வங்காளத்தின் ஒன்பதாவது முதலமைச்சர் மட்டுமின்றி முதல் பெண் அமைச்சரும் இவரே ஆவர். இவர் வைத்திருக்கும் கார் மஹிந்திரா ஸ்கேர்ப்பியோ அதன் மதிப்பு 15.91 லட்சம் ஆகும்.

8. Y S Jagan Maohan Reddy
ஆந்திர இளைஞர்களின் ரோல் மாடலாக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டுவரும் இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் Y S .ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார். இதற்குமுன் இவர் வைத்திருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை மாற்றிவிட்டு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கான்வாயான  டாடா சஃபாரி ஸ்டோர்ம் காரை பயன்படுத்துகிறார். இதன் மதிப்பு 16.35 லட்சம் ஆகும்.

9. K. Chandrashekar Rao
அனைவராலும்  கே.சி.ஆர் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இவரின் முழுப்பெயர் கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ்  , தெலுங்கானாவின் தற்போதைய முதலமைச்சராக பணியாற்றும் இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பிராந்தியக் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார். தெலுங்கானாவின் முதல் முதல்வரும் இவரே ஆவார் இவர் 1.40 கோடி மதிப்புள்ள LAND CRUSIER காரை வைத்துள்ளார்.

10. Nitish Kumar
நிதீஷ் குமார் 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார், மேலும் ஐந்து முறை இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் பணியாற்றிய இவர். இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக மின்சார வாகன பயன்பாட்டை குறித்து மக்கள் மத்தியில் பெரிதும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் அதை ஆதரிக்கும் வகையில் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை வெளிபடுத்தும் எலக்ட்ரிக் காரை கடந்த 3 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார் 11 லட்சம் மதிப்பிலான இந்த கார் ஒரு மணி நேரம் ரீசார்ஜ் செய்தால் 150 கி.மீ., தூரத்தை கடக்கும் திறன் கொண்டது.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வெயிலயான தகவலின்படி சுற்றுலா துறைகளில் இருந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணிப்பதாக வாங்கியுள்ள 37 வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி  712 கோடி என்று கூறப்படுகின்றது அப்படி இருக்கையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் மக்களின் நிதி தொகை திரும்பவும் மக்களுக்காகவே பயன்படுத்த படுகிறதா என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.