சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்? விளக்குகிறார் அன்னப்பூரணி அரசு அம்மா..!

நித்தியானந்தா போல சமூகவலைதளம் மூலம் அட்டாக் செய்யும் அன்னப்பூரணி..!

சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்? விளக்குகிறார் அன்னப்பூரணி அரசு அம்மா..!

தமிழ்நாட்டில் திடீர் ஆதிபராசக்தி அவதாரம் எடுத்துள்ள அன்னப்பூரணி அரசு அம்மாவினுடைய அருள் வாக்குகளும், ஆன்மீகம் குறித்த பயிற்சிகளின் வீடியோக்களும் தினந்தோறும் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டு இருக்கின்றன. கடந்த வருடம் இறுதியில் சென்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் புயலாய் வீசியவர் அன்னப்பூரணி அரசு அம்மா. ஆதிபராசக்தியின் அவதாரம் என தன்னைத் தானே கூறிக் கொண்டவரை உற்றுக் கவனித்த நெட்டிசன்கள், அவரது ஒரிஜினல் வீடியோவை எப்படியோ தேடி கண்டுப்பிடித்து விட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் இன்னொரு பெண்ணின் கணவரான அரசுவை சண்டையிட்டு கூட்டிக் கொண்டு சென்ற அன்னப்பூரணி, கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு ஆதிபராசக்தியாக அவதாரம் தரித்து மக்களுக்கு அருள் புரிந்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவர்கள் சென்னையில் ஆன்மீக பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்து மக்களிடம் இருந்து பணம் கறந்து வந்தனர். 

இதற்கிடையில் அரசு மர்மமான முறையில் இறந்து போகவே, அன்னப்பூரணி ஆதிபராசக்தி அவதாரம் எடுத்தார். நேற்று பெய்த மழையில் பூத்த காளான் போல, திடீரென ஆதிபராசக்தியாக அவதாரம் எடுத்தவரை சுற்றி 10 பேர் அம்மா அம்மா எனக் கதறும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது. ஒரு சிறைய மண்டபத்துக்குள் 10-15 பேருக்கு அருள் கூறி வந்தவர், பின்னர் வேர்ல்ட் பேமஸ் ஆகி, கிறிஸ்துவ மதபோதகர்களின் கூட்டம் போன்று மேடை போட்டு, கட்டவுட் வைத்து, கலர் கலராக பட்டுப்புடவை அணிந்து லிப்ஸ்டிக், நகை அணிகலன்கள் என பரவசமாக தோன்றி மக்களை ஒன்றிணைத்து அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்தார். இவருக்கு தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்த போதிலும் கூட, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துவிட்டு, தனது தொழிலை தொடங்க சென்று விட்டார் அன்னப்பூரணி. ஏற்கனவே நித்யானந்தா தமிழ்நாட்டில் இருந்து தப்பித்து தனக்கென ஒரு நாட்டையே உருவாக்கி, அங்கிருந்து சமூக வலைதளம் மூலம் தனது அருள்வாக்கை கூறி வருகிறாரோ.. 

அதேபோல அன்னப்பூரணி தற்போது சமூக வலைதளத்திலும் அட்டாக் செய்ய ஆரம்பித்து விட்டார். அந்த வரிசையில், சமாதிக்கும் சாவுக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து அன்னபூரணி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சொற்பொழிவில், சமாதி என்றால் என்ன? சமம்+ ஆதி என்பதாகும். அதாவது அந்த ஆதிமூலத்துடன் சமமாக இருப்பது, அத்துடன் சங்கமித்து இருப்பது. இறைத்தன்மையுடன் கலந்திருப்பது. ஆன்மீகம் சார்ந்தவர்கள் என தங்களை காட்டி கொள்கிறார்கள் என்றாலே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என முடிவு செய்து வைத்துள்ளது சமாதி நிலைதான். என அவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இறுதியாக வாழும் காலத்தில் உடலோடு ஒன்றாமல் வாழுங்கள். அப்படி வாழும் போது எந்தவித கஷ்டமோ நஷ்டமோ வராது என கூறி சொற்பொழிவை முடித்துள்ளார் அன்னப்பூரணி. இவர் சொல்வது ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என நம்மையே சிந்திக்க வைக்கும் அளவுக்கு வித்தைகளை கைவசம் வைத்திருப்பதாக இணைய வாசிகள் இவரை பிச்சு ஒதரி வருகின்றனர்.