அஜித்தை வைத்து 4 படங்களை எடுத்த சிறுத்தை சிவாவை கேலி செய்தாரா வினோத்? இந்த காட்சியை வைத்தது ஏன்?

அஜித்தை வைத்து 4 படங்களை எடுத்த சிறுத்தை சிவாவை வலிமை படத்தில் ஹெச். வினோத் கிண்டல் செய்து காட்சி அமைத்துள்ளதாக ரசிகர்கள் சர்ச்சை கிளப்பியுள்ளனர்.

அஜித்தை வைத்து 4 படங்களை எடுத்த சிறுத்தை சிவாவை கேலி செய்தாரா வினோத்?  இந்த காட்சியை வைத்தது ஏன்?

எச். வினோத் இயக்கத்தில்  நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் வலிமை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக, உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் வலிமை வெளியானது.

 கடந்த மூன்று ஆண்டுகளாக அஜித்தை திரையில் காணாத ஏக்கத்தில் இருந்த அஜித் ரசிகர்கள் விருந்தாக இப்படம் அமைந்தது. இருப்பினும் பொது ரசிகர்களிடம் வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது வலிமை திரைப்படம். 

பிற மாநிலங்கள்,வெளிநாடுகளிலும் வலிமை படம் வசூலை குவித்து வருகிறது. மூன்று நாட்களில், உலகம் முழுவதும் 100 கோடி மைல்கல்லைத் தாண்டிய ‘வலிமை’ இன்று 150 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. 

ஆக்‌ஷன் படமான இப்படம் இன்னும் பெரும்பாலான திரையரங்குகளில் விற்பனையாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் தற்போது வலிமை படத்தில் 14 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, படம் இரண்டரை மணி நேரம் கொண்ட படமாக  திரையிடப்பட்டு வருகிறது. செகண்ட் ஆஃப்பை விட ஃபஸ்ட் ஆஃப்பில் நிறைய காட்சிகளை குறைத்துள்ளனர். இது படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தில் சிறுத்தை சிவாவை கேலி செய்த, காட்சி ஒன்று இடம்பெற்று இருப்பதாக ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளனர். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா.

அந்த படத்தை தொடர்ந்து வேதாளம், விவேகம் விசுவாசம் என்று அஜித்தை வைத்து மட்டுமே படத்தை இயக்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தில் ‘சில்மிஷ சிவா’ கதாபாத்திரம் சிறுத்தை சிவாவை கேலி செய்வது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

சில்மிஷ சிவா இந்த படத்தின் 3 முறை வந்து தன்னுடைய பெயரை அறிமுகம் செய்துகொள்வார். அது சிறுத்தை சிவா அஜித்தை வைத்து தொடர்ந்து படம் எடுத்ததை கேலி செய்வது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கிளப்பிவிட்டுள்ளனர்.