”வந்தே பாரத் ரயில் கட்டணத்தை அனைவருக்கும் ஏதுவாக குறைக்க வேண்டும்” - முதலமைச்சர் கோரிக்கை!

”வந்தே பாரத் ரயில் கட்டணத்தை அனைவருக்கும் ஏதுவாக குறைக்க வேண்டும்” - முதலமைச்சர் கோரிக்கை!

”வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறை க் க வேண்டும்” என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கோரி க் கை விடுத்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டங் களை தொடங் கி வைப்பதற் கா க சென்னை வந்திரு க் கும் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலைய புதிய ஒருங் கிணைந்த முனையம், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங் கிய பின்னர், விவே கானந்தர் இல்லம் சென்ற பிரதமர், அடுத்ததா க அரசு நி கழ்ச்சி நட க் கும் பல்லாவரம் கிரி க் கெட் மைதானத்து க் கு சென்றடைந்தார். இந்த நி கழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், எல்.முரு கன் உள்ளிட்ட மத்திய அமைச்சர் கள், மாநில அமைச்சர் கள் என பலரும் பங் கேற்றுள்ளனர்.  

தொடர்ந்து நி கழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், முதலில் பிரதமர் மோடி இன்று தொடங் கி வைத்த திட்டங் களு க் கும், அடி க் கல் நாட்டவிரு க் கும் திட்டங் களு க் கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மதுரை, கோவை ஆ கிய மாவட்டங் களில் மெட்ரோ ரயில் திட்டங் களை தொடங் கியிருப்பதால் அதற் கான நிதியை மத்திய அரசு ஒது க் க வேண்டும் எனவும், சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங் க வேண்டும் எனவும், தமிழ க ரயில்வே திட்டங் களு க் கான நிதியை அதி கரி க் க வேண்டும் எனவும் பிரதமரு க் கு கோரி க் கை வைப்பதா க பேசினார்.

இதையும் படி க் க : ”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மி கவும் நேசி க் கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்வே பணி கள் நடைபெற்று வரு கிறது. அதற் கான நிதியை மத்திய அரசு ஒது க் கீடு செய்ய வேண்டும் எனவும், சென்னை பரந்தூர் விமான நிலையம் மற்றும் கோவை விமான நிலைய விரிவா க் க பணி களு க் கும் மத்திய அரசு உரிய நிதியை ஒது க் கி தர வேண்டும் எனவும், ம க் களின் தேவை களை நிறைவேற்ற மாநில அரசு க் கு மத்திய அரசு உதவி கள் செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங் கப்பட்டதற் கா க மத்திய அரசு க் கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், அதே நேரத்தில் வந்தே பாரத் ரயில்  சேவையின் கட்டணத்தை அனைவரும் பயன்படுத்துவதற் கு ஏதுவா குறை க் க வேண்டும் என்று கோரி க் கை வைத்துள்ளார்.