பிரிந்தது ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி...

பிரிந்தது ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி...

நிதிஷ் குமார் அவருடைய அரசியல் பயணத்தை ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து தொடங்கினார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய தலைவரான லாலு பிரசாத் யாதவும் நிதிஷும் தமிழ்நாட்டின் அண்ணாவும் கருணாநிதியும் போன்று   சகோதரர்களாக இருந்தனர்.  பின்னர் முதலமைச்சர் ஆசையில் அவரை பிரிந்து ஜனதா தளத்துடன் இணைந்தார்.  ஆனாலும் அவரது முதலமைச்சர் கனவு நிறைவு பெறவில்லை.  2000ல் நடைபெற்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆனார்.

2 தொகுதியில் மட்டுமே வெற்றி

2013ல் நிதிஷ் பாஜகவுடனான அவரது கூட்டணியை முடித்துக் கொண்டார்.  அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவரது அமைச்சரவையிலிருந்த 11 பாஜக அமைச்சர்களை பதிவியிலிருந்து நீக்கினார்.  அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். 2014 பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிதிஷ் 40 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மீண்டும் முதலமைச்சர்

2015 சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் ’மகாத்பந்தன்’ கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார் நிதிஷ் குமார்.  துணை முதலமைச்சர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் செய்த ஊழலுக்கு விளக்கமளிக்காததால் நிதிஷ் அவருடைய முதலமைச்சர் பதவியை 2017ல் ராஜினாமா செய்தார்.

நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு

நிதி ஆயோக்கின் 7வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலமையில் நடைபெற்றது.  அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்ட நிலையில் நிதிஷ் அக்கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவர் ஓய்வு எடுத்து வருவதாக நிதிஷ் குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்று மாலையில் அவர் மாநிலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளதை பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.    

குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவையும் நிதிஷ் குமார் புறக்கணித்ததாக விமர்சித்துள்ளது பாஜக.  அதற்கு விளக்கமளித்த ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற தலைவர் உபேந்திர குஷ் முதலமைச்சர் முதலமைச்சர் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் அதிகம் உள்ளன எனவும் அவரால் எப்பொதும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள இயலாது எனவும் பதிலளித்திருந்தார்.

எதிர்கட்சி ஆதரவா?

எப்பொழுதும் நிதிஷ் குமார் அரசை விமர்சித்து கொண்டிருக்கும் பீகாரின் எதிகட்சி தலைவர் கடந்த சில மாதங்களாக அவரை விமர்சிப்பதை நிறுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டு கூறியுள்ளது பாஜக தரப்பு.

கடந்த ஜூலை மாதம் பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் பேச்சு மிக கடுமையாக இருந்ததாகவும் அது நிதிஷை அதிருபி அடைய செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளில் 200 தொகுதிகள் பாஜகவுக்கும் 43 தொகுதிகள் மட்டுமே ஐக்கிய ஜனதா தளத்திற்கும் அளிக்கப்படும் என்ற அறிவிப்பே நிதிஷின் இத்தகையான போக்கிற்கு காரணம் என அரசியல் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

நிதிஷ் மீண்டும் ’மகாத்பந்தன்’ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன.  இன்னும் இரண்டு நாட்களில் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் பிரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவருடைய கட்சிகளின் எம்.பிக்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிந்தது ஜேடியு-பாஜக: 

எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் உடனான சந்திப்பிற்கு பிறகு ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையிலான கூட்டணி கைவிடப்பட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பீகார் ஆளுநரை சந்திக்க இருக்கிறார் நிதிஷ் குமார். 

பாஜகவுடனான கூட்டணி முடிவடைந்த நிலையில் காங்கிரசும் ராஷ்டிரிய ஜனதா தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிப்போம் என கடிதம் வழியாக தெரிவித்துள்ளன. பீகாரில் ’மகாத்பந்தன்’ கூட்டணி மீண்டும் அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளன.