ஈரானில், ஒரு 22 வயது பெண்ணை, ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால், அடித்தே கொலை செய்த சம்பவம் தொடர்ந்து, ஈரான் மட்டுமின்றி உலகளவில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம், மாசா அமினி (Mahsa Amini) என்பவரது இறப்பு, உலகளவில் பெரும் போர்க்களத்தை உருவாக்கியுள்ளது. குர்திஷ் பகுதியைச் சேர்ந்த மாசா, சரியான முறையில், ஹிஜாப் அணியாத காரணத்தால், அறநெறி காவலர்கள், அவரை கைது செய்து அடித்து துன்புருத்திய நிலையில், அவர் கோமா நிலைக்கு தள்ளபட்டார். பின் அவர் மரணித்த நிலையில், இதனை ஒரு கொலையாகவே உலக மக்கள் பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | ஹிஜாப் அணியாத குர்திஷ் பெண் அடித்துக் கொலை…போராட்டம் வெடித்தது!
இதனைத் தொடர்ந்து, உலகில் உள்ள பல பெண்கள், ஹிஜாபை தூக்கி எரிந்தும், முடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பு குரல்களை எழுப்பி வந்தனர். மேலும், பல சோசியல் மீடியா கணக்குகள் இது குறித்து மீம்களைப் பகிர்ந்து விழிப்புணர்வு கிளப்பி வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க பத்திரிக்கையாளர், கிரிஸ்டியேன் அமென்போர் என்பவர், ஈரானிய அதிபரான இப்ராகிம் பாய்சியை நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து நேர்காணல் நடத்த அனுமதி பெற்றிருந்தார். அவர் அதிபரை சந்திக்க, முக்காடு அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் கிரிஸ்டியேன் மறுப்பு தெரிவித்து, நேர்காணலுக்கு காத்திருந்தார்.
ஆனால், அதிபர் இப்ராகிம் நேர்காணலை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்ட நிலையில், தனிமையில் இருக்கும் போட்டோ ஒன்றை, கிரிஸ்டியேன் சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இது படு வைரலாகி, அமெரிக்காவிற்கு கோபத்தைக் கிளப்பியது.
இதனால், அமெரிக்க கருவூலத் துறையின் ஒரு பிரிவான வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் ஈரான் மீது தடைகளை விதித்துள்ளது. அவை விதித்த தடைகள் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளின் ஏழு மூத்த தலைவர்களையும் குறிவைத்தன.
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப், ஈரானிய இராணுவத்தின் தரைப்படைத் தளபதி கியூமர்ஸ் ஹெய்டாரி மற்றும் அறநெறிக் காவல்துறையின் தலைவரான முகமது ரோஸ்டமி செஷ்மே கச்சி உள்ளிட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அமெரிக்க கருவூலம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க | ஈராக்கில் வன்முறை…பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
"இந்த அதிகாரிகள் அமைதியான எதிர்ப்பாளர்கள் மற்றும் ஈரானிய சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஈரானிய பஹாய் சமூகத்தின் உறுப்பினர்களை ஒடுக்குவதற்கு வன்முறையை வழக்கமாகக் கையாளும் அமைப்புகளை மேற்பார்வையிடுகின்றனர்" என்று கருவூலம் கூறியது.
தடைசெய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய எந்தவொரு அமெரிக்க சொத்துக்களும் தடைகளின் ஒரு பகுதியாக முடக்கப்படும்.
பொருளாதாரத் தடைகள் அமெரிக்க செயல்பாடுகளைக் கொண்ட சர்வதேச வங்கிகள் உட்பட அமெரிக்கர்களுடன் வணிகம் செய்வதைத் தடைசெய்கிறது, உலகளாவிய நிதி நெட்வொர்க்குகளுக்கான அவர்களின் அணுகலை திறம்பட கட்டுப்படுத்துகிறது.
தற்போது விதிக்கப்பட்ட தடைகளை ஒட்டி, ஈரானுக்கு பெரும் பிரச்சனை கிளம்பி இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தாலிபன்கள் மற்றும் ரஷ்யர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, இந்த ஹிஜாப் பிரச்சனை வைத்து, பெரும் கிளர்ச்சியை உலகளவில் கிளப்பி விடுமோ என்ற பதற்றம் உலக நாடுகளில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
--- பூஜா ராமகிருஷ்ணன்