கொரோனாவுக்காக டிரம்ப் எடுத்துக்கொண்ட ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகம்: ஒரு டோஸ் விலை இவ்வளவா!

கொரோனாவுக்காக டிரம்ப் எடுத்துக்கொண்ட ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகம்: ஒரு டோஸ் விலை இவ்வளவா!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்திய ஆன்டிபாடி காக்டெயில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்து பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக ஏராளமான உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்த சூழலில், கடந்த ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்திய ஆன்டிபாடி காக்டெயில் என்ற தடுப்பு மருந்துதினை ரோச் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஆன்டிபாடி காக்டெய்ல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவமான உயிரியல் மருந்துகளின் கலவையாகும். அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக, மனித உடலில் ஆன்டிபாடிகள் போல செயல்படுகின்றன. ரோச் இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்துள்ள இந்த தடுப்பு மருந்துகளை சிப்லா நிறுவனம் நாடு முழுவதும் சந்தைகளில் விநியோகிக்க உள்ளது. மேலும், ஆண்டிபாடி காக்டெயில்ன் ஒரு டோஸ் விலை 59 ஆயிரத்து 750 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் லேசான மற்றும் மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளிடத்தில் இது சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.