திருமணமான பெண்ணை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்... காதல் டார்ச்சருக்கு கத்தியால் பதில் சொன்ன அண்ணன்..!

கர்நாடகாவில் காதலிக்க வலியுறுத்தி திருமணமான தன் சகோதரியின் பின்னாள் சுற்றியவரை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சினிமா பாணியிலான இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு..

திருமணமான பெண்ணை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்...  காதல் டார்ச்சருக்கு கத்தியால் பதில் சொன்ன அண்ணன்..!

அமீர்கான் என்ற இந்த இளைஞர் தான், திருமணமான பெண் பின்னாள் சுற்றி தன்னை மணம் செய்து கொள்ளக்கூறி தொல்லை செய்து இறுதியில் கொலையான 20 வயது இளைஞன். பெண்ணின் அண்ணன் ஆத்திரத்தில் அமீர்கான் வேலை செய்து வந்த கடைக்கே சென்று அமீர்கானை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

பீதர் நகரில் வசித்து வரும் அமீர்கான், அப்பகுதியில் உள்ள பல் பொருள் அங்காடிக் கடையில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியில் இருந்த ஜீசன் என்பவரின் திருமணமான சகோதரியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை மணக்குமாறு அமீர்கான் தொல்லை செய்து வந்ததாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஜீசனிடம் அவரது சகோதரி இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்திரமடைந்த ஜீசன், நேராக அமீர்கான் வேலை செய்து வந்த பல் பொருள் அங்காடி கடைக்குச் சென்றுள்ளார். வெளியில் நின்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஜீசன் கையில் கத்தி இருந்ததை கண்டு உள்ளே சென்றுள்ளார் அமீர்கான். தொடர்ந்து பின்னால் சென்ற ஜீசன், அமீர்கானை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

ஆரம்பத்தில் சிறிய காயம் போல் தெரிந்தாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அமீர்கான் உயிரிழந்தார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்து குறிப்பிடத்தக்கது. இதனை வைத்து ஜீசனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருமணமான பெண்ணின் பின்னாள் சுற்றி தொல்லை கொடுப்பது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என இணையத்தில் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.