ஓவர் நைட்டில் சூப்பர் மாடலாக மாறிய மம்மிக்கா தாத்தா...எப்படின்னு பார்க்கலாம் வாங்க!

ஓவர் நைட்டில் சூப்பர் மாடலாக மாறிய மம்மிக்கா தாத்தா...எப்படின்னு பார்க்கலாம் வாங்க!

ப்பா...என்ன ஸ்டைலு..அப்படின்னு சொல்ற அளவுக்கு தினக்கூலியாக வேலை செய்து வந்த  60 வயது தாத்தா ஒரே நாளில் சூப்பர் மாடலாக... ஆகியிருப்பது தான் தற்போது இணையத்தில்  செம வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக ஓவர் நைட்டில் பணக்காரர் ஆவதும், ஓவர் நைட்டில் ஏழையா மாறுவதும்  படத்தில் மட்டுமே நிகழும். நிஜ வாழ்க்கையில் நடப்பது என்பது சாத்தியமற்றது. 

ஆனால் இங்கோ,  தினக்கூலியாக இருந்த ஒருவர், ஓவர் நைட்டில் சூப்பர் மாடலாக மாறிய சம்பவம் கேரளாவையே பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆம். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொடிவள்ளி கிராமத்தில் வசித்து வரும் மம்மிக்கா தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். 60 வயது முதியவரான இவர், அந்த கிராமத்தில் எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும், சிறிதளவு கூட முக சுளிப்பு இல்லாமல் முதல் ஆளாக சென்று செய்து முடித்து வருவார். 

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என்று ஒரு வகையில் வயதான மாஸ் ஹீரோ போல் தோற்றமளிக்கும் இவர், அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்களிடம் மிகுந்த நட்புடன் பழகி வருவதால், அவர்கள் இவரை  மம்மிக்கா...மம்மிக்கா... என்று செல்லமாக அழைத்து விளையாடி வருவது வழக்கம். இப்படி இளைஞர்களிடம் இவர் சகஜமாக பேசுவதாலயோ என்னவே தெரியவில்லை தற்போது அப்பகுதி போட்டோ கிராபர் மூலம் அவரின் வாழ்க்கையே  ஒரு சூப்பர் மாடலாக மாறியுள்ளது.

பொதுவா இந்த தாத்தாவ பார்த்தா  நமக்கெல்லாம் முதலில் தோன்றுவது என்னவோ அவருடைய வெள்ளை தாடியும், வயதான தோற்றமும் தான். ஆனால் அந்த போட்டோ கலைஞருக்கோ, படையப்பா படத்துல வர மாஸான டையலாக் தான் நியாபகம் வந்திருக்கும் போல.. அட என்ன டையலாக்குன்னு யோசிக்கிறிங்களா...அதாங்க வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உண்ண விட்டு போகலன்னு நம்ம ரம்யா கிருஷ்ணன் சொல்லுவாங்களே...அதேதான். மம்மிக்கா என்னதான் வயதானவராக இருந்தாலும், அவருடைய தோற்றத்தில் ஒரு கெத்து இருப்பதையும், ஒரு பக்க சாயலில் இவர் நடிகர் போல் இருப்பதையும் அந்த போட்டோ கலைஞர் ஷரீக் எங்கேயோ ஒரு இடத்தில் கவனித்திருக்கிறார். அட இந்த தாத்தா செம கெத்தா இருக்கிறாரே என்று அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார்.

பின்னர் இது குறித்து தாத்தாவிடம் அந்த போட்டோ கிராபர் ஷரீக் பேசியுள்ளார். ஆனால் மம்மிக்காவோ நான் இதற்கெல்லாம் செட்டாக மாட்டேன் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் விடாத அந்த ஷரீக் தன்னுடைய போட்டோக்களையெல்லாம் காட்டி ஒருவழியாக போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து போட்டோ ஷூட்டிற்காக அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மம்மிக்காவிற்கு, கோட் சூட், கண்ணாடி மற்றும் மேக் அப் போன்ற அலங்காரங்களால் தயார்படுத்தி, அதன்பின் இவர்கள் எடுத்த போட்டோ ஷூட்தான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 

உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட  இந்த மாடல் போட்டோ ஷூட்டில்,  மம்மிக்கா கூலாக கோட் சூட் அணிந்து, கண்ணாடி போட்டு , செம கெத்தாக கார் பக்கம் நிற்பதும், நடப்பதும், கையில் டேப் லேட் வைத்துக்கொண்டு அதை பார்ப்பதும் போன்ற லூக்கில் அசத்தி உள்ளார். மேலும் 60 வயதில் ரிட்டையர் ஆன ஒரு பணக்கார வெளிநாட்டு டான் போன்ற லுக்கில் அனைவரையும் மிரட்டியுள்ளார். 

இப்படி ஒரே நாள் இரவில் சூப்பர் மாடலாக உருவெடுத்து இருக்கும் மம்மிக்காவின் புகைப்படங்களை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறனர். இதனையடுத்து  மாடலிங்கை அதிகம் நேசிக்க ஆரம்பிச்ச  மம்மிக்கா  தனக்கென்று இன்ஸ்ட்டா பக்கம் ஒன்றையும் தற்போது தொடங்கி உள்ளார். அதோடு கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் சேர்த்து செய்ய போவதாக மம்மிக்கா கூறியுள்ளது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தினக்கூலியாக இருந்த தாத்தாவை தனது போட்டோ ஷூட் மூலம் ஒவர் நைட்டில் பெரிய மாடலாக மாற்றி அசத்திய கலைஞர் ஷரீக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.