சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’ குறித்த சில அப்டேட்...!

சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’ குறித்த சில அப்டேட்...!

சென்னை - கோவை இடையேயான ’வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அந்த ரயில் குறித்தான சில தகவல்களை தற்போது காணலாம்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத் ரயில்’ சேவையை ஆங்காங்கே நாட்டுக்காக திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு  டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சென்னை - மைசூரு இடையில் 5 வது வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, சென்னை - கோவை இடையேயான நாட்டின் 12 வது வந்தே பாரத் ரயில் சேவையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த வந்தே பாரத் ரயில் சேவை, கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கோவையில் இருந்து கிளம்பும் இந்த ரயிலானது இடையில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2. 25 மணிக்கு புறப்படும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும் என்றும், வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை மற்ற ரயில்களைவிட வேகமாக செல்வதால் சென்னை - கோவை இடையேயான பயண நேரம் வெறும் 6 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்...நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!

அதுமட்டுமல்லாமல், வந்தே பாரத் ரெயிலில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்காது என்பதால், 16 பெட்டிகளுடன் ரயிலை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி 8 பெட்டிகளை கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் என்றும், வாரம் ஒருநாள் புதன்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, அடுத்ததாக சென்னை விமானத்தில் முடிவுற்ற புதிய முனைய திட்டப்பணிகளை திறந்து வைத்த பின்னர், சென்னை சென்ட்ரலில் சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை திறந்து வைக்கவுள்ளார்.