பேராசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்... இப்போ என்ன பண்ணாலும் அடி தான்!!

பேராசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்... இப்போ என்ன பண்ணாலும் அடி தான்!!

சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர்.தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக இருக்க கூடிய நடிகராக மாறிவிட்டார். 

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். 

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

சினிமாவிற்குள் நுழைந்து வெகு சில காலம் ஆகி இருந்தாலும், பல்வேறு யுக்திகளை கையாண்டு இன்று மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் பல படங்களை நடித்து வந்தார்.

 சிவகார்த்திகேயன் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று சொல்லும் அளவிற்கு பல படங்கள் அவருக்கு கைகொடுத்து இருந்தது. ஆனாலும் 
தன்னுடைய தயாரிப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் சென்று பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களோடு ஹீரோவாக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றார்.

அதிலும் முக்கியமாக முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், ஏஜிஎஸ், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் என பல கம்பெனிகளுக்கு சிவகார்த்திகேயன் படம் பண்ணுகிறார். 

சிவகார்த்திகேயன் இப்படி வரைமுறை இல்லாமல் இஷ்டத்திற்கு ஒரே நேரத்தில் ஒத்துக்கொண்டது தற்போது சிக்கலாக மாறியுள்ளது.

மூன்று பெரிய கம்பெனிகளுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு இப்போது எந்த கம்பெனிக்கு முதலில் கால்சீட் கொடுப்பது என்று திணறி வருகிறார். 

மூன்றில் ஒரு கம்பெனியை கூட விட்டுக் கொடுக்க முடியாது அப்படிப்பட்ட மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் சிவகார்த்திகேயன். 

அதுமட்டுமின்றி இந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் அட்வான்ஸ் வாங்கி விட்டாராம். இவருக்கு கால்ஷீட் கொடுத்தால் அவர் கோபித்துக் கொள்வார் அவருக்கு கால்ஷீட் கொடுத்தால் இவர் கோபித்துக்கொள்வார் என்று, யாருக்கு வாக்கு கொடுப்பது என்று தெரியாமல் முழித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். ஏதாவது ஒன்றில் சறுக்கினாலும் நிச்சயமாக பெரிய அடி விழும் என்ற பயத்தோடு விழிபிதுங்கி நிற்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இவரின் வளர்ச்சி, மூன்று பெரிய நிறுவனங்கள் அவருக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் தமிழ் சினிமா அவரைக் கொண்டு போய் உச்சத்தில் உட்கார வைத்திருக்கிறது என சினிமா வட்டாரகள் கிசு கிசுக்கின்றன.