மீண்டும் பெண்களை உவமைபடுத்தியே பேசும் சைதை சாதிக்...

மீண்டும் பெண்களை உவமைபடுத்தியே பேசும் சைதை சாதிக்...

திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக்கின் பேச்சு மீண்டும் சர்ச்சையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடித்ததே தமது அழுத்தமான கொள்கைகளாலும், சித்தாந்த பேச்சுகளாலும் தான். முன்னணி பேச்சாளர்களின் தெருமுனை- திண்ணை பிரச்சாரங்களால் மக்களை தங்கள் வசப்படுத்தினர். பின் தொடர்ச்சியாக மக்களுக்கு புரிய அனைத்து கட்சியினரும் சில ஒருமையான பேச்சுகள் மற்றும் ஆபாச வார்த்தைகளை உச்சரித்து வர தொடங்கினர். கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியால் கட்சியினர் பேச்சுகள் உடனடியாக பொதுவெளியில் வருவதையடுத்து அனைத்து கட்சியினரும் நாகரீகமான பேச்சுகளையே பொது வெளியில்  பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகளான காயத்ரி ரகுராம் (தற்போது கட்சியில் இல்லை) , குஷ்பூ, நமீதா உள்ளிட்டோரை ஆபாசமாக மேடையில் பேசியதையடுத்து விமர்சனத்திற்கு உள்ளானார். இதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூட தனது ட்விட்டர் பக்கத்தில் சக மனுஷியாக பெண்ணாக மன்னிப்பு கேட்கிறேன் என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தற்போது சைதை சாதிக் செய்தி நிறுவன யூ டியூப்  ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் சீமானின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய போது ”கலைஞரின் பேனா ஒன்றும் விஜயலட்சுமி அல்ல சீமான் தொட்டால் விடுவதற்கு” என பேசியுள்ளார். சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து திமுகவின் முன்னணி தலைவர்கள் பலர் பதிலளித்தனர் ஆனால் அவைகள் அரசியல் சார்பான பதில்களாகவே இருந்தது. ஆனால் தற்போது சைதை சாதிக் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிக்க:   போரில் பின்வாங்குகிறதா உக்ரைன்... சுனக்கிடம் ஜெலன்ஸ்கி கூறியதென்ன?!