2 வருசமா அவரை பாக்கணும்னு Try பண்ணேன் ஆனா..விஜயகாந்த் குறித்து கலங்கிய எஸ் ஏ சந்திரசேகர்

கேப்டன் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த எஸ் ஏ சந்திரசேகர், கண் கலங்கி பேசிய வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2 வருசமா அவரை பாக்கணும்னு Try பண்ணேன் ஆனா..விஜயகாந்த் குறித்து கலங்கிய எஸ் ஏ சந்திரசேகர்

1970 காலங்கள் தொடங்கி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு திரையுலகினரும், ரசிகர்களும் இவரை பாசத்துடன் கேப்டன் என அழைத்து வருகின்றனர். 1980, 1990 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தார் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் 20 க்கும் அதிகமான படங்களில் போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்த ஹீரோ என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். 

மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 நடித்திருந்தார் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். 


சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் விஜயகாந்த். நடிகர் சங்கத்தில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த விஜயகாந்த், அரசியலுக்கு வந்து 2005 ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி தீவிர அரசியலில் இறங்கி எம்எம்ஏ, எதிர்க்கட்சி தலைவர் என படிப்படியாக உயர்ந்தார்.

2016 ம் ஆண்டிற்கு பிறகு உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் போனது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர்.


இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர். பலரும் காலத்தில் எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே என்று கவலைப்பட்டு வருகின்றனர். 


இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த்தின் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கி உள்ளார்.

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை சட்டம் ஏ இருட்டறை ‘ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். 

அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர். 17 படங்கள் விஜயகாந்தை வைத்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருப்பதாக அவரே கூறினார்.  சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த்தின் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கி, மனிதநேயம் என்றால் அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நடிகரை தாண்டி ஒரு மாமனிதன் என்றார், மேலும் விஜயகாந்தை கடந்த 2 ஆண்டுகளாக பார்க்க எண்ணி, சில பல காரணகளால் அவரை சந்திக்க முடியாமல் போனது என்றார்.

அதற்கு அரசியல் ரீதியான  காரணங்கள் கூட இருக்கலாம் என்றும், விஜய் மக்கள் இயக்கம் கட்சிக்கு பாதிப்பு எதும் வந்து விடும் என்றும் எண்ணி எஸ் ஏ சந்திரசேகர் சந்திக்காமல் இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.