தமிழ்நாடா..? தமிழ்நாய்டுவா...? மீண்டும் எழுந்த சர்ச்சை...சுட்டிக்காட்டிய இராமதாஸ்...!

தமிழ்நாடா..? தமிழ்நாய்டுவா...? மீண்டும் எழுந்த சர்ச்சை...சுட்டிக்காட்டிய இராமதாஸ்...!

மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் பிழையுடன் இருந்ததை சுட்டிக்காட்டிய பிறகு திருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இணையதளத்தில் பிழை :

தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே, தமிழ்நாடா? தமிழகமா? என்ற சர்ச்சை நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இணையவழி வாக்கெடுப்பு :

அதில், ”தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் http://mygov.in தமிழ்நாட்டின் பெயர் TamilNaidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்!

தேவையின்றி சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு பெயர் :

தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்!

இதையும் படிக்க : அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...!

http://mygov.in தளத்தில்  நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

கண்டனம் தெரிவித்த ராமதாஸ் :

மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக  TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு  சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ” இவ்வாறு அந்த பதிவில் டாக்டர் இராமதாஸ் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிழையை திருத்திய மத்திய அரசு :

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த சர்ச்சை குறித்து மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் ”மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக  TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.