10.5% இடஒதுக்கீட்டிற்காக ராமதாஸ் செய்த தியாகம்..! சூம் மீட்டிங்கில் கண்ணீர் விட்டு உருக்கம்..!

சூம் காலில் கண்ணீர் விட்ட ராமதாஸ்..!

10.5% இடஒதுக்கீட்டிற்காக ராமதாஸ் செய்த தியாகம்..! சூம் மீட்டிங்கில் கண்ணீர் விட்டு உருக்கம்..!

2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 23 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்த பாமக, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு அதிமுகவுடன் கூட்டணி போட்டது. 

தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாமகவின, இந்த தேர்தலில் கணிசமான இடத்தை நிச்சயம் பெறுவோம் என எதிர்பார்த்தன. 

எதிர்பார்த்ததில் பாதி இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் வெறும் 5 இடங்களில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது. சேலம் மேற்குத் தொகுதியில் இரா.அருள், பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே. மணி, தருமபுரி தொகுதியில், வெங்கடேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 23 தொகுதிகளின் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய நகரச் செயலாளர்கள் ஆகிய நிர்வாகிகளுடன் இணையதளம் வாயிலாக மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார். தோல்விக்கான காரணங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. 

 “கூட்டணியில் பாஜக இல்லாமல் இருந்திருந்தால் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். சிறுபான்மையினர் வாக்குகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட நமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் தலித் வாக்குகளும் பாமக வேட்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தனர்.“நீடூர் மற்றும் கங்கனாபுத்தூர் இஸ்லாமியர் பூத்களில் ஒரு ஓட்டுக்கூட பாமக வேட்பாளர்களுக்குப் பதிவாகவில்லை, அதிமுகவுக்குத் தலித் நிர்வாகிகள் வாக்குகள் மட்டுமே விழுந்தது. அதிலும் அவர்களின் குடும்பத்தினர் வாக்குகள் வரவில்லை” என்று தோல்விக்கான காரணங்களை அடுக்கினர்.

பின்பு பேசிய ராமதாஸ், ”10.5% இட ஒதுக்கீடுக்காகதான் குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாகவும், கொடுக்கப்பட்ட 23 தொகுதிகளில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்ப்பார்க்கப் பட்ட நிலையில், வெறும் 5 தொகுதிகள் மட்டும் தான் வெற்றி கிட்டியது ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்தார். மாற்றுச் சமூகத்தின் வாக்குகளை வாங்க நீங்கள் முயலவில்லை என குற்றம்சாட்டிய அவர் இட ஒதுக்கீட்டிற்காக எந்த போராட்டமும், தியாகமும் செய்ய நான் தயார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.