14மணி நேரத்துக்கு மேலாக மின்தட்டுப்பாடு..!இலங்கையை போல் மாறிவரும் பாகிஸ்தான்! 

14மணி நேரத்துக்கு மேலாக மின்தட்டுப்பாடு..!இலங்கையை போல் மாறிவரும் பாகிஸ்தான்! 

இலங்கையை போன்று கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானில், நிலக்கரி வாங்குவதற்கு அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் கடந்த 14 மணிநேரத்திற்கும் மேலாக மின்தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இணையம் மற்றும் செல்போன்  சேவைகள் முடக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு துறை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது:

நிலக்கரி வாங்குவதற்கு அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது. இந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான்கான் அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆட்சியில் மாற்றம் நிகழ்ந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.

இந்த அசாதாரண சூழலை சமாளிக்கவே சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்கப் பாகிஸ்தான் முயன்றது. ஆனால் உலக நாடுகளின் நிதி உதவி கிடைக்காமல் பாகிஸ்தான் பரிதவித்து வருகிறது. அதற்கு காரணம், பிரான்ஸ் நாட்டின்  நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்ததுதான். 

வெளிநாடுகள் உதவிய போதும் பாகிஸ்தானில் மாறாத நிலை:

இருப்பினும், பாகிஸ்தானுக்கு சவுதி அரபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில நிபந்தனைகளுடன் கடன் கொடுக்க முன்வந்தபோதும், நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமால் பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்த சூழலில், அந்நாட்டில் அந்நிய செலவாணி  கையிருப்பு இல்லாததால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் நிலவி, பாகிஸ்தானில் கடுமையான மின்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 14 மணி நேரத்துக்கு மேலாக மிந்தட்டுபாடு ஏற்பட்டு, இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு, தகவல் தொலைத்தொடர்பு துறை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து பாகிஸ்தான் மின்துறை வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால்: 

நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நிலக்கரி பற்றாக்குறையால் நிறைய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போதைய மின் விநியோகத்தைக் கையாள முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் ``உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் பெரும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முதல் சாவால்:

இந்நிலையில், பகிஸ்தானின் புதிய பிரதமரான ஷெபாஸ் ஷெரீப்புக்கு இது முதல் சவாலாகும். ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை போன்றே, எரிபொருள் விலை உயர்வு என பாகிஸ்தான் சிக்கி தவிக்கிறது. அடுத்து உயரபோகும் எரிபொருள்  விலையை சமாளிக்கும் சூழல் கூட தற்போதைக்கு இல்லை என்பதால், இந்த பொருளாதார நெருக்கடி ஷெபாஸ் ஷெரீப்புக்கு கடும் சவாலாக அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை மீண்டு வருமா? பாகிஸ்தான், இந்த சூழலை எதிர்கொள்வாரா? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில்:

இதனிடையில்  இந்த மின்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வது குறித்து கத்தார் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.